அந்த பேட்டன்ட்க்கான விண்ணப்பம் அவளின் பெயரிலேயே இருந்தது...
அவளை பார்த்துக் கொண்டே, “நேத்தே உங்க கிட்ட சொல்ல நினைச்சேன்... பட், இட்ஸ் ஓகே,” என்றான் உதய் எந்த எக்ஸ்ட்ரா அலட்டலும் இல்லாமல்!
என்ன சொல்வது என சில வினாடிகள் தடுமாறிய நந்திதா, மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு, “இட்ஸ் அ ஹானர் உதய்... தேங்க்ஸ்... தேங்க் யூ சோ மச்... ஆனால் என் பேருல ஏன்??? கம்பெனி பேர்ல ஃபைல் செய்திருக்கலாமே???” என்றாள்!
“இது உங்க அறிவால உருவானது தானே நந்திதா?”
“பட் ஸ்டில்...”
“நீங்க கேட்குறதாலே சொல்றேன்... நார்மலா கம்பெனி ப்ரோடோகோல் படி பார்த்தா அப்படி தான் செஞ்சிருக்கனும்... பட் உங்களுக்கு என்பதால எக்சப்ஷன் கொடுத்து உங்க பேர்ல் ரெஜிஸ்டர் செய்ய சொன்னேன்...”
முகத்தில் எந்த ரியாக்ஷன் காட்டாமல், “ஓ!” என்றாள் நந்திதா!
“நீங்க கம்பெனியை விட்டு போனாலும் கூட, இது உங்க ப்ராஜக்ட்டா தான் இருக்கும் ந... நந்திதா... கம்பெனிக்கு கிடைச்சிருக்க ஆர்டருக்காக நாங்க ரோபோஸ் மேனுஃபேக்ச்சர் செய்தால் உங்களுக்கு ஒவ்வொரு ரோபோக்கும் ராயல்டி தரனும்...”
“ஆனால் அது சரியில்லையே... நான் செய்தது எல்லாமே உங்க கம்பெனிக்காக தான்... patent பத்தி எல்லாம் நான் யோசிக்க கூட இல்லை...”
“வாழ்க்கையில எத்தனையோ விஷயங்கள் நாம எதிர்பாராத விதத்துல போகுது... அதுக்கெல்லாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்க?”