இப்போது கோபத்தையோ, முகத்தில் அடிப்பது போன்ற பேச்சையோ வெளிப்படுத்த மனம் வராமல், “சாரி உதய்,” என மெல்லியக் குரலில் சொன்னாள் நந்திதா!
அவளின் பேச்சு மாறிய விதம், மனதை மயக்க, “இப்போ கூட உன் மனசை மாத்திக்கலாம் நதி... இட்ஸ் நாட் லேட்,” என்றான் உதய் மிருதுவானக் குரலில்!
“அப்படி எல்லாம் ஈசியா நான் மனசை மாத்திக்க மாட்டேன் உதய்...”
“அப்படியா என்ன??? இரண்டு நாளைக்கு முன்னாடி, இந்த வேலை போல எதுவுமே இல்லை, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்ன நீயே தான், நேத்து ரிசைன் செய்றேன்னு சொன்னதும்... மாறுவது மனம் நந்திதா... உன் மனசு மாறும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு... நான் காத்திருப்பேன்...”
பேச்சு போகும் திசை பிடிக்காமல், சர்க்யூட் பக்கம் பார்வையை திருப்பி, “உங்க டைமை வேஸ்ட் செய்றீங்க,” என்றாள் நந்திதா!
“இருந்துட்டு போகட்டும் என் டைம் தானே... என் அன்பு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு...”
இதற்கு மேல் உதயை பேச விடுவது நல்லது இல்லை என்பது புரிய, “ஸ்டாப் திஸ் உதய்! ஏன் இப்படி லோக்கலா பீகேவ் செய்றீங்க???” என எரிந்து விழுந்தாள் நந்திதா!
அவளின் திடீர் கோபத்தினாலும், பேச்சினாலும் பாதிக்கப்பட்டு, “நான் பீகேவ் செய்றது லோகலா இருக்கா???? என்ன தெரியும் உனக்கு,” என்று வேகமாக பேச தொடங்கிய உதய், உடனேயே சுதாரித்துக் கொண்டு,
“சாரி... இனிமேல் இன்டர்நேஷனல் லெவலுக்கு பீகேவ் செய்ய முயற்சிக்கிறேன், ஓகேவா???” என்று முடித்தான்!
நந்திதா குழப்பத்துடன் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்!