பணிவுடன் கார் கதவை திறந்து விட்ட ட்ரைவர், பெண்கள் இருவரும் காரில் அமரவும், கார் கதவை சாத்தி விட்டு, உடனேயே காரை கிளப்பிக் கொண்டு சென்றான்.
✽✽✽
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின் அதே கார் ராஜசேகர் – காமாட்சியின் வீட்டின் முன் வந்து நின்றது.
காரில் இருந்து இறங்கிய ரேவதி, ப்ரியா வருவதற்காகவும் காத்திருக்காமல் நேரே வீட்டின் உள்ளே சென்றாள்.
பேத்தியிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த காமாட்சி ரேவதியை பார்த்து ஆச்சர்யத்துடன் வரவேற்றாள்.
“வா ரேவதி... என்ன இந்த நேரத்துல???”
ரேவதியும் சுற்றி வளைக்கவில்லை!
“நான் நந்திதா கிட்ட பேசனும்க்கா... அவ எங்கே?”
காமாட்சிக்குள் கேள்வி எழுந்தது! “நந்து மாடில இருக்கா???? இப்போ என்ன ஆச்சு???”
“சொல்றேன்... முதல்ல அவளை வர சொல்லுங்களேன்...”
சின்ன யோசனைக்கு பின், “நந்திதா,” என்று சத்தமாக குரல் கொடுத்தாள் காமாட்சி.
“சொல்லுங்க ஆன்ட்டி,” என உடனேயே மாடியில் இருந்து பதில் வந்தது.
“இங்கே வாயேன் நந்து... துளசியும் அங்கே தானே இருக்கா? அவளையும் அழைச்சுட்டு வா...”