“நீ எல்லாம் ஆஃபிஸ் போய் உட்கார்ந்து பிசிபி போர்டை நோண்ட தான் லாயக்கு! சுத்த வேஸ்ட்! திட்டாமல், பின்ன செல்லம் கொஞ்சுவாங்களாக்கும்... இரண்டு நாளைக்கு முன்னாடி அப்படி கத்திட்டு போனவங்க இப்படி இறங்கி வரணும்னா உன் ஹீரோ அவங்களை என்ன பாடு படுத்தினானோ,” என்றாள் துளசி.
“ச்சேச்சே அவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டார்...”
“ஹ்ம்ம்... எதை சரியா செய்றீயோ இல்லையோ இந்த உன் அவருக்கு ஜிங் ஜாங் போடுறதை மட்டும் பக்காவா செய்ற... சரி, போ போய் அவங்க கிட்ட பேசிட்டு வா... உனக்கு எப்படியோ தெரியலை, எனக்கு அவங்க என்ன பேச போறாங்கன்னு தெரியாம தலையே வெடிச்சிடும் போல இருக்கு...”
“இன்னும் கொஞ்சம் தூரம் வாயேன் ஒசிமம்...”
“லூசு நந்து... உன்னை எல்லாம் கல்யாணம் செய்துட்டு அந்த உதய் என்ன செய்ய போறானோ... இதுக்கு மேல...”
பேசிக் கொண்டே போன துளசி, நந்திதாவின் முகம் சிவந்து மின்னுவதை பார்த்து பேச்சை நிறுத்தினாள்...
“வாவ்! வெட்கப் படுறீயா நந்து????” என்று கேட்டதோடு நிறுத்தாமல், தன் கையை கிள்ளி பார்த்துக் கொண்டாள் துளசி!
“இன்னைக்கு நடக்குற அதிசயத்தை எல்லாம் நம்ப கிள்ளி கிள்ளி என் கை ரண களம் ஆகிடும் போலருக்கே... ஒன்ஸ் அபான் அ டைம், நந்திதா நந்திதான்னு ஒருத்தங்க சொன்னாங்க வெட்க படுறது எல்லாம் நம்மளை நாமே கீழே...”
“ஐயோ துளசி நானே டென்ஷன்ல இருக்கேன்... நீ வேற ஏன் இப்படி படுத்துற?”