“நீங்க என்ன சொல்றீங்க அக்கா?” என்றுக் கேட்டாள்.
“இதுல நான் சொல்றதை விட நந்துவும், உதயும் என்ன சொல்றாங்கன்றது தான் முக்கியம்... நீ உதய் கிட்ட பேசினீயா?” என வினவினாள் காமாட்சி!
“ம்ம்... பேசினேன்...”
“அவனுக்கு பிடிச்சதை தானே செய்ற?”
“ம்ம்ம்...”
“உனக்கும் சம்மதமா?”
“அதெல்லாம் எதுக்கு அக்கா? நீங்களே சொன்னது போல கல்யாணம் செய்துக்க போற இரண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு, அதுக்கு மேல நான் சொல்லி என்ன ஆக போகுது? நீங்களும் அத்தானும் தான் இந்த கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்தி தரனும்...”
“இதெல்லாம் நீ சொல்லனுமா ரேவதி? உதயையோ, உன்னையோ நாங்க யாராவது அந்நியமா நினைச்சிருக்கோமா?”
“தெரியும் அக்கா... அந்த தைரியத்தில தான் இருக்கேன்,” என்ற ரேவதி, மீண்டும் நந்திதா பக்கம் பார்த்து,
“உன்னோட நான் கொஞ்சம் பேசனும்,” என்றாள்.
நந்திதா சரி என தலை அசைக்க,
“இங்கே இல்லை, தனியா பேசனும்,” என்ற ரேவதி, காமாட்சியிடம்,
“தப்பா நினைக்காதீங்க அக்கா,” என்றாள்.