(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“உன் மருமகள் கிட்ட நீ பேச போற, இதுல நான் நினைக்க என்ன இருக்கு? பேசு... இங்கே விட தோட்டத்துக்கு போனால் ஃப்ரீயா பேசலாம்,” என்றாள் காமாட்சி!

   

“சரி, அப்போ அங்கேயே போய் பேசுறேன்,” என்ற ரேவதி, மீண்டும் ஒரு முறை நந்திதாவை பார்த்து விட்டு தோட்டத்தை நோக்கி சென்றாள்.

   

நந்திதா அசையாமல் நிற்க, துளசி,

   

“நீ ஏண்டி இங்கேயே நிக்குற?? சீக்கிரம் போ,” என்று அவளை அவசரப் படுத்தினாள்.

   

“பயமா இருக்குடி ஒசிமம்,” என்று சின்ன குரலில் சொன்ன நந்திதாவை பார்த்து துளசிக்கு சிரிப்பு தான் வந்தது.

   

“இதோ பாருடா எல்கேஜி படிக்குற குட்டி பாப்பா ஸ்கூலுக்கு போக பயப் படுது...”

   

“நீயும் கூட வா துளசி...”

   

“அடியே... உன்னை... சரி சரி வா... உன்னை பத்திரமா கொண்டு போய் விட்டுட்டு வரேன்...”

   

தோழிகள் இருவருமாக தோட்டத்தை நோக்கி நடந்தார்கள்...

   

“என்ன பேச போறாங்கன்னு தெரியலையே ஒசிமம்,” என்றாள் நந்திதா தயக்கத்துடன்!

   

“எனக்கும் தெரியலையே நந்து...! இந்த தடவை தனியா கூப்பிட்டு அன்னைக்கு மாதிரி காச் மூச்ன்னு திட்ட போறாங்களோ என்னவோ!”

   

“திரும்ப திட்டுவாங்களா??”

   

நந்திதாவின் முகம் போன போக்கை பார்த்து சிரித்து விட்டு,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.