“ஹ்ம்ம்... எல்லாம் என் நேரம்டி... உதய்ன்னு சொன்னாலே மேடம் முகம் சிவக்குது... வருங்கால மாமியார் பேசனும்னு சொன்னாலே பிபி ஏறுது ஆனால் நான் பேசினால் உனக்கு படுத்துற மாதிரி இருக்கு???”
“அம்மா தாயே தெரியாமல் சொல்லிட்டேன்... நானே அவங்க என்ன பேச போறாங்களோன்னு டென்ஷன்ல இருக்கேன்...”
துளசி நின்று நந்திதாவை நேராக பார்த்தாள்...
“நந்து, எதுக்கு இவ்வளவு டென்ஷன்? ரிலாக்ஸ்! இதெல்லாம் என்ன? ஜுஜுபி... நாம பார்க்காத டெஸ்ட்டா, வைவாவா?? இப்போ அவங்க என்ன சொன்னாலும் அவசரப் பட்டு பதில் சொல்லாம, யோசிச்சு பேசு... பொறுமையா இரு... உனக்கு நான் சொல்லவே வேண்டாம்... லாஸ்ட் டைம் உன் பொறுமையை பார்த்து அதிசயப் பட்டு போயிட்டேன்... ஸோ ஜஸ்ட் ரிலாக்ஸ்...”
“ம்ம்...”
“நான் இங்கேயே வெயிட் செய்றேன் நந்து... நீ பேசிட்டு வா...”
“ம்ம்ம்... தேங்க்ஸ்டி ஒசிமம்!”
நந்திதா தயக்கத்துடன் நடந்து சென்றாள்...
அவள் பொதுவாக தைரியசாலி தான்... மனதில் இருப்பதை தைரியமாக முகத்திற்கு நேராக சொல்லி பழகியவள்...
ஆனால் அவள் வாழ்வில் வந்திருக்கும் உதயின் பிரவேசம், அவளை பல விதங்களில் மாற்றி இருந்தது...
இரண்டு தினங்களுக்கு முன் ரேவதி பேசியதை போல வேறு யாராவது அவளிடம் பேசி