(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

ஷ்யாம் வித்தியாசமாக விழித்துக் கொண்டிருந்தானே தவிர அதிர்ந்துப் போனது போல தெரியவில்லை!!!!

   

இது அவனுக்கு புதிய செய்தி இல்லையோ???

   

மனசுக்குள் கேள்வி தோன்றினாலும், அதை பற்றி அதிகம் யோசிக்காமல் சட்டென ஒரு முடிவுக்கு வந்தவளாக, ரோஷனியிடம்,

   

“நீங்க என்ன நினைக்குறீங்க??” என்றுக் கேட்டாள் ஹேமா.

   

ஹேமா போல அல்லாமல், ரோஷனி இன்னமும் இந்த ‘ட்ரிபில் மெகா’ அதிர்ச்சியில் இருந்து வெளி வந்திருக்கவில்லை!!!

   

அவள் கண்ணுக்கு குழந்தையாகவே தெரிந்துக் கொண்டிருக்கும் மகள், இப்படி திடீரென ஒரு இளைஞன் பக்கம் கை நீட்டி இவனை திருமணம் செய்து வையுங்கள் என்றால், யார் தான் அதிர்ச்சி அடைய மாட்டார்கள்!

   

ஹேமாவால் ரோஷனியின் மனநிலையை ஓரளவிற்கு இப்போதும் ஊகிக்க முடிந்தது.

   

“பெரியவங்க நாம யோசிக்காததை சின்னவ சொல்லிட்டா! சுமியோட பொண்ணாச்சே, சும்மாவா! அவ சொன்னதும் நல்ல ஐடியான்னு தான் எனக்கு தோணுது. ஷ்யாம் பத்தி நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்னு இல்லை...”

   

“தெரியும், நல்லாவே தெரியும்,” என அவசரமாக சொன்ன ரோஷனி, குழப்பத்துடன் மீண்டும் ஒரு முறை ஷ்யாம் பக்கம் பார்த்தாள்.

   

“ரேஷூ சொல்றா சரி, ஆனால் ஷ்யாமுக்கும் அவளை பிடிக்கனுமே...”

   

ரோஷனி சொல்லி முடிக்கும் முன்பே,

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.