(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

“பிடிச்சிருக்கு ஆன்ட்டி, ரொம்ப பிடிச்சிருக்கு,” என்றான் ஷ்யாம்.

   

அவன் சொன்ன விதத்தில் ரேஷ்மியின் முகம் கோடைக்கால சூரியனாக ஜொலிக்க, ராகவி,

   

“அட்லாஸ்ட் கேட் இஸ் அவுட் ஆஃப் தி பேக்! உடனேயே மேரேஜ்க்கு டேட் ஃபிக்ஸ் செஞ்சிருங்க மம்மி. கிராண்டா கல்யாணம் நடந்தா நல்லா இருக்கும். ஆனால் என்னை சாரீ எல்லாம் கட்ட சொல்லிடாதீங்க,” என சந்தோஷமாக பேசிக் கொண்டே போக, ஹேமா அவளை பார்த்து செல்லமாக முறைத்தாள்.

   

ரோஷனிக்கோ தலையை சுற்றுவதுப் போல இருந்தது!!!

   

“இந்த கல்யாணம் நடந்தா எனக்கும் சந்தோஷம். ஆனால் நாம மட்டும் முடிவு எடுக்க முடியுமா? அவர் கிட்ட கேட்கனும், அத்தை கிட்ட பேசனும்! அதை எல்லாம் விட முக்கியமா ரேஷூவோட அப்பா கிட்ட சம்மதம் வாங்கனும்...”

   

“சித்தி!”

   

உரக்க ஒலித்தது ரேஷ்மியின் குரல்.

   

அவள் மேலே பேசும் முன்பே அவள் என்ன சொல்ல போகிறாள் என்பதை ரோஷனியால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

   

“ரேஷூ கண்ணா, இது விளையாட்டு விஷயம் இல்லை. கல்யாணம்!!!! உன் அப்பா கிட்ட கேட்காம நான் ஒன்னும் செய்ய முடியாது!”

   

“அப்பாவா, யாரு அப்பா?? நீங்க சொல்றவர் எனக்கு அப்பாவா? என்னை பொறுத்த வரைக்கும், அவர் எனக்கு யாரோ ஒருத்தர்.”

   

“அமைதியா பேசு ரேஷூ. இப்படி குரலை உயர்த்தி எல்லாம் பேசக் கூடாது,” என ரோஷனி கடிந்துக் கொள்ள, ஏற்கனவே கமல் பற்றிய குற்ற உணர்ச்சியில் இருந்த ஹேமாவும்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.