“இவ்வளவு சொல்லுறாங்களே, எதுக்கு இன்னும் யோசிக்குற சரண்யா? இந்த காலத்துல இப்படி எல்லாம் யார் தேடி வந்து உதவி செய்றது? அவங்க சொல்ற மாதிரி போய் தான் பாரேன்... பிடிக்கலைனா திரும்ப வந்திரு... இந்த வீடும், நாங்களும் இங்கேயே தான் இருப்போம்,” என்றாள்.
சரண்யா இப்போதும் அமைதியாக இருந்தாள்...
“என்ன சரண்யா, இந்த அமைதியை மௌனம் சம்மதம்னு எடுத்துக்கலாமா?” என்றாள் மைத்ரேயி முகம் மலர!
“மேடம்... உங்க வீட்டுல உங்க ஃபேமிலி எல்லோரும் இருப்பாங்க... வந்து... இது எல்லோருக்கும் பிடிக்குமோ என்னவோ...”
சுலோச்சனா இருப்பதால் மித்ரனை பற்றி நேரடியாக தன் சந்தேகத்தை கேட்காமல் சுற்றி வளைத்து சரண்யா கேட்கிறாள் என்பது மைத்ரேயிக்கு புரிந்தது!
அதனால் பதில் சொல்ல அவளும் சரண்யாவின் பாணியையே பின்பற்றினாள்...
“எல்லோர் கிட்டேயும் கேட்டாச்சுப்பா... அண்ணன் சரின்னு சொல்லிட்டான்... என் ஹஸ்பன்ட் என் வார்த்தைக்கு மறு பேச்சு சொல்ல மாட்டார்... அம்மாக்கும் சம்மதம்... இன்ஃபாக்ட் இந்த ஐடியாவை கொடுத்ததே என் அம்மா தான்...”
“ஓ...!”
“சரி, நாம ப்ளான் செய்வோம்... உனக்கு உடம்பு சரியில்லை... அதனால் இந்த வீக் என்ட் வேண்டாம்... அடுத்த வீக் என்ட், நீயும் நிஷாவும் ஷிஃப்ட் ஆக ரெடியா இருங்க...”
சரண்யாவிற்கு மலைப்பாக இருந்தது...!
மைத்ரேயியை முதல் நாள் ஃபோகஸ் எலக்ட்ரானிக்ஸ் சென்று சந்தித்தது முதலே அவளின்