போனாலும் கூட ட்ரான்ஸ்போர்ட் ப்ராப்ளம் இருக்காது... நீயும் அங்கேயே வந்திரேன்...”
மைத்ரேயி அவள் வீடு இருக்கும் பகுதியில் தன்னை வீடு மாற்றிக் கொள்ள சொல்கிறாள் என்று அதை புரிந்துக் கொண்ட சரண்யா என்ன சொல்லி அவளிடம் மறுப்பது என்று யோசித்தாள்...
அப்படி மறுக்க, இங்கே நிஷாவிற்கு துணையாக சுலோச்சனா இருப்பது ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் பணம்! மைத்ரேயியின் வீடு இருப்பது மேல்தட்டு பகுதி... அங்கே வீட்டு வாடகையே அவளின் ஒரு மாத சம்பளம் அளவிற்கு இருக்கும்...!
சரண்யா எப்படி தண்மையாக மறுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க, அதற்குள் சுலோச்சனா,
“நானும் கூட இதை சொன்னேன்... ஆனால் அவ தனியா இருக்கனுமேன்னு யோசிக்குறா... இங்கே நாங்க இருக்கோம்... நிஷா ஸ்கூல்ல இருந்து வந்தா நேரா எங்க வீட்டுக்கு வந்திருவா,” என்றாள்.
“எங்க வீட்டுல என் அம்மா இருக்காங்களே சரண்யா... நீ எதைப் பத்தியும் கவலை பட வேண்டாம்,” என்றாள் மைத்ரேயி.
இப்போது தான் மைத்ரேயியின் பேச்சின் முழு பொருள் புரிய, “உங்க வீட்டுக்கா???” என்றாள் சரண்யா அதிர்ச்சியுடன்!
“வீடுன்னா, தனி அபார்ட்மென்ட் மாதிரி தான்... எங்க க்ளோஸ் ரிலேடிவ்ஸ் வந்தா ஃப்ரீயா தங்கன்னு கட்டின வீடு அது... உனக்கும், நிஷாக்கும் வசதியா இருக்கும்ன்னு எனக்கு தோணுது...”
சரண்யா நம்ப முடியாமல் திகைத்துப் போய் மெளனமாக இருக்க, மைத்ரேயியே தொடர்ந்து பேசினாள்...