(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

முடியாது என பிடிவாதம் பிடிக்க அவளை தூக்கி வண்டியில் அமர வைத்துவிட்டு தானும் ஏறி வண்டியை விரட்டினான்.

   

”நீ செய்றது தப்பு தில்லை”

   

“பேசாம இரு”

   

”அந்த பொண்ணுங்க பாவம்”

   

”அமைதியா இரு” என தில்லை பொறுமையிழந்து கத்த அதைக் கேட்டு சம்யுக்தா அழத் தொடங்கினாள்.

   

அவளின் அழுகுரல் கேட்டதும் தில்லை அவளை பார்த்து வியந்தான்.

   

”எதுக்கு இப்ப அழற”

   

”அந்த பொண்ணுங்களை விட்டுடு தில்லை, உனக்கென்ன பணம்தானே வேணும் 2 கோடி என்ன 5 கோடி நான் தரேன், என் அப்பாகிட்ட இருக்கு உனக்கு வேணும்ங்கறதை வாங்கிக்க, அந்த பொண்ணுங்களை விட்டுடு தில்லை” என கெஞ்ச அவனோ

   

”ஷ் பேசாம இரு” என சொல்ல அவளோ விம்மி விம்மி அழத் தொடங்கினாள். அவளின் அழுகை தில்லையை பாடாய்படுத்தியது

   

”அழாமதான் வாயேன்” என கத்த அவள் இன்னும் அதிகமாக அழவே அவனோ

   

”உனக்காக அழாம ஏதோ முன்னபின்ன தெரியாத பொண்ணுங்களை நினைச்சி அழறியே, உன்னை என்னால புரிஞ்சிக்க முடியலை”

   

”நீ ஒரு கெட்டவன், உனக்கு என்ன தெரியும் என்னைப்பத்தி, உன்னால யாரையும் புரிஞ்சிக்க முடியாது, நீ ஒரு மிருகம், காட்டான்” என திட்ட அதைக் கேட்டபடியே வண்டியை ஒரு சேரிப்பகுதிக்குள் விட்டான். வண்டியும் குலுங்கி குலுங்கி சென்றது அதில் இருவருமே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.