(Reading time: 5 - 9 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

  

அவள் சந்தோஷப் படவும் இல்லை, வருத்தப் பட்டதாகவும் தெரியவில்லை.

  

ஏதோ அதுவரை அவள் அவன் ப்ரேக் அப் செய்வதற்காக நடு ரோட்டில் நின்று அழுது புலம்பாதது விபுலுக்கு நிம்மதியைக் கொடுத்தது.

  

மேலே என்ன சொல்வது என்று அவன் யோசிக்க தொடங்க, ஏஞ்சல் அவன் பக்கம் தன் கையை நீட்டினாள்.

  

விபுல் நம்ப முடியாமல் விழித்தான்.

  

ஏஞ்சலே அவனின் கையை எடுத்து குலுக்கினாள்.

  

“ஐ அன்டர்ஸ்டான்ட் விபுல். நீ ரொம்ப நல்லவன். யூ டிசர்வ் அ பெட்டர் கேர்ள். ஆல் தே பெஸ்ட்.”

  

ஏஞ்சல் உள் மனசுக்குள் வந்திருந்த ஏமாற்றத்தை சிரிப்பால் மறைத்து விபுலை வாழ்த்தினாள்!

  

“தேங்க்ஸ் ஏஞ்சல். வா, நான் உன்னை டிராப் செய்துட்டுப் போறேன்.”

  

“இல்லை, இல்லை, நான் வாக் செய்தே போயிடுவேன். நீ போ. குட் லக்!”

  

ஏஞ்சல் நடக்கத் தொடங்கினாள். இரண்டு கைகளையும் இறுக்கமாக மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டாள். விபுல் ப்ரேக் அப் செய்ததற்கு அவள் தான் காரணம், விபுலை குற்றம் சொல்ல முடியாது. ஒரு பெருமூச்சுடன் வீடு நோக்கி சென்றாள் ஏஞ்சல்.

   

தொடரும்...

Go to Nilave mukam kattu story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.