(Reading time: 6 - 11 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 04 - சித்தார்த்

" ஆம் சாரி. இந்த காட்டேஜ் நகுல் பேர்ல புக் ஆகி இல்லை." பிரன்ட் டெஸ்க் பெண் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்துக் கொண்டே சொன்னாள்.

  

"நல்லா பாருங்க! எங்க கிட்ட கன்பர்மேஷன் ஈமெயில் கூட இருக்கு!" அதுல் அவளிடம் சொல்லிக் கொண்டே ப்ரீத்தியைப் பார்த்தான்.

  

புரிந்துக் கொண்டவளாக மொபைலை கையில் எடுத்து நகுல் அனுப்பி இருந்த ஈமெயிலை தேடினாள் ப்ரீத்தி.

  

அதுல் ஷர்மிளாவும், ஷில்பாவும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று சோதனை செய்பவனாக அவர்கள் இருந்த பகுதியைப் பார்த்தான். ஷர்மிளா ஒரு இடத்தில் அமர்ந்திருக்க, ஷில்பா அவளைச் சுற்றி சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள்.

  

அண்ணன் மகளைப் பார்த்ததும் அதுலின் மனம் மென்மையானது. அதற்குள் ப்ரீத்தியும் ஈமெயிலைக் கண்டுப்பிடித்திருந்தாள்.

  

"இதோ ஒருக்கு கன்பர்மேஷன் ஈமெயில்."

  

பிரன்ட் டெஸ்க் பெண் மொபைலை கையில் வாங்கி அதில் இருந்த பார்கோடை ஸ்கான் செய்தாள்.

  

"இது வேலிட் ரிசர்வேஷன்!" என அவள் யோசித்துக் கொண்டே சொல்லவும், அதுலும் ப்ரித்தியும் நிம்மதியாக மூச்சு விட்டார்கள்.

  

"ஒரு நிமிஷம் தாங்க!" என அவர்களிடம் பவ்யமாக சொல்லி மீண்டும் கம்ப்யூட்டரில் ஏதோ செய்ய தொடங்கினாள் பிரன்ட் டெஸ்க் பெண்.

  

"ஓவர் புக்கிங் பீக் சீசன்ல செய்வாங்கன்னு கேள்விப் பட்டு இருக்கேன். இப்போ தான் ஸ்கூல் ப்ரேக் ஸ்டார்ட் ஆச்சு, அதுக்குள்ளே செஞ்சிருக்காங்க!" என ப்ரீத்தியிடம் குறைப்பட்டான் அதுல்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.