(Reading time: 6 - 11 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

  

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே புதிதாக ஒரு இளம்பெண் அங்கே வந்தாள். பக்கத்தில் இருந்த பிரன்ட் டெஸ்க்கில் தன் மொபைலை காண்பித்தாள்.

  

ப்ரீத்தி அதுலுக்கு பதில் சொல்வதுப் போல தலையை ஆட்டி விட்டு, புதியவளை எடைப் போட்டாள்.

  

நவநாகரீக யுவதி என்று பட்டப் பெயர் கொடுக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு மாடர்னாக தெரிந்தாள் அவள்.

  

அவளின் வயது பின் இருபதுகளில் இருக்கலாம். முடியை கர்ல் செய்து பாதி முடியை முன்னால் எடுத்து விட்டிருந்தாள்.

  

காதுகளில் பெரிய வட்டமாக கம்மல்கள். வைட் மெட்டலா, என்று ப்ரீத்திக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அந்த கம்மல்கள் அவளுக்கு க்யூட்டாக இருந்தது.

  

அவள் அணிந்திருந்த ஷார்ட்ஸ், டாப்ஸ், ஹீல்ஸ் எல்லமே சரியாக பொறுந்தி இருந்தது. நிறங்களும் மேட்சாக இருந்தது.

  

"மம்மி!" ஷில்பா ப்ரீத்தியிடம் ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.

  

புதியவள் ஷில்பாவையும் ப்ரித்தியையும் பார்த்தாள். ப்ரித்தி புன்னகைப் புரிய, அவளும் பதிலுக்கு நட்பாக புன்னகை புரிந்தாள்.

  

அந்தப் பெண்ணின் ரிசெர்வேஷனை சரிப் பார்த்த பெண், "தேங்க்ஸ் பார் ஸ்டேயிங் வித் அஸ்! உங்களுக்கு காட்டேஜ் நம்பர் டென் புக்காகி இருக்கு. உங்க கீஸ் தரேன்," என சொல்லி ப்ரித்தியின் ரிசெர்வேஷனை சரிப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் பேசினாள்.

  

"நம்பர் டென் கீ கொடு, மெல்!"

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.