(Reading time: 6 - 11 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

"நம்பர் டென்னா?" என்று மற்றவள் கேட்கும் போதே அதுலுக்கும் விபரம் புரிந்தது.

  

"அது நாங்க புக் செய்திருக்க காட்டேஜ். எங்களுக்கு முதல்ல கீ கொடுங்க," என்றான் கறாராக.

  

பிரன்ட் டெஸ்க் பெண்கள் தங்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள்.

  

"காம் டவுன் சார்!" என ஒருத்தி சொல்ல,

  

"நாங்க என்னன்னு பார்க்கிறோம்!" என்றாள் மற்றொருத்தி.

  

"சீக்கிரமா பாருங்க! நாங்க பேமிலியா வந்திருக்கோம். அம்மா, இந்த பாப்பா எல்லோரும் இருக்காங்க!"

  

அதுல் அதை சொன்னதோடு நிறுத்தாமல், நீ தனியாக தானே வந்திருக்கிறாய் என்பதாக பக்கத்தில் நின்ற புதியவளைப் பார்த்தான்.

  

அவளோ அவன் பக்கம் கவனித்ததாகவே தெரியவில்லை. தன் மொபைலில் டெக்ஸ்ட் செய்துக் கொண்டிருந்தாள்.

  

ஷர்மிளாவும் எதுவோ சரி இல்லை என்று உணர்ந்து, எழுந்து வந்து என்ன என்று விசாரித்தாள். ப்ரீத்தி அவளுக்கு விளக்கம் கொடுத்தாள்.

  

ரிசர்வேஷன்களை சரிப் பார்த்துக் கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி, "ஓ, இப்போ புரியுது!" என்றாள் சத்தமாக.

  

மொபைலை பார்த்துக் கொண்டிருந்த பெண் கூட இப்போது முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள்.

  

"இஸ் எவரிதிங் ஆல் ரைட்?" என அவள் கேட்க,

  

"எஸ் மேம்!" என்றாள் பிரன்ட் டெஸ்க் பெண்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.