(Reading time: 6 - 11 minutes)
Un katal iruntal potum
Un katal iruntal potum

ஆனால் தேர்வு முடிவுகள், க்ரூப் 1 தேர்வுக்காக தயார் செய்வது என்று நாட்கள் ஓட ஓட... அவளின் மனமும் நிகழ்காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டது!

  

**********************

  

மூன்று வருடங்களுக்குப் பிறகு!

  

சௌந்தர்யா க்ரூப் 1 தேர்வில் வெற்றிப் பெற்று டெப்யூட்டி கலக்டராக பணியாற்றத் தொடங்கி இருந்தாள்.

  

அரசு வேலை என்று எந்த மெத்தனமும் இல்லாமல் பொறுப்புடன் பணியாற்றி நல்ல பெயரும் எடுத்திருந்தாள்...

  

மூன்று வருடங்கள் சென்றிருந்தாலும், அவ்வப்போது எதிர்பாராமல் ‘அவனின்’ நினைவு அவளின் மனதில் திடீரென்று வந்துப் போகும்... அவள் சந்தோஷப் படும் போது... வருத்தப் படும் போது... நள்ளிரவில் திடுமென தூக்கத்தில் இருந்து நினைவு வரும் போது... இப்படி குறிப்பாக சொல்ல முடியாது திடீரென்று அவனின் நினைவு வந்துப் போகும்...!!!

  

சௌந்தர்யா அவனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை... ஆனாலும் அவனின் நினைவு அவளை விட்டு விலகாமலே இருந்தது...

   

அவள் வீட்டில் வேறு அவளின் திருமணப் பேச்சை தொடங்கி இருந்ததால் அவனின் நினைவை அழிக்க முயன்றுப் பார்த்தாள்... ஆனால் இதயத்திற்கும் மூளைக்கும் ஏழாம் பொருத்தம் என்பது புரிந்தது! அவள் அவனைப் பற்றி மறக்க முயல, முயல அவனின் நினைவு அதிகமானதே தவிர குறையவில்லை...

 

சௌந்தர்யாவிற்கு ஒரு விதத்தில் குழப்பமாக இருந்தது!!! அவள் ஒன்றும் முட்டாளில்லை... அவன் யார், அவன் பெயர் எதுவுமே அவளுக்குத் தெரியாது! இரண்டே இரண்டு தடவை பார்த்திருக்கிறாள்... அதிலும் ஒருத் தடவை அவன் நடந்துக் கொண்ட விதம் சரியும் இல்லை... அப்புறம் எப்படி இத்தனை நாட்களாக அவனின் நினைவு அவளுக்குள்ளே இருக்கிறது???

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.