(Reading time: 6 - 11 minutes)
Un katal iruntal potum
Un katal iruntal potum

  

குமரி என்ற உடன் குமரி மாவட்ட நினைவுகள் மீண்டும் சௌந்தர்யாவிற்குள் தோன்றியது...

  

அதற்கு மேல் தங்கையுடன் பேச்சைத் தொடராமல் அலுவலகத்திற்கு கிளம்பும் வேலையில் ஈடுப் பட்டாள்... அத்தோடு அந்த நினைவும் அவளின் பின்னே சென்றது...!

  

***************

  

சௌந்தர்யா மும்முரமாக லுவலகத்தில் வேலையில் ஈடுப்பட்டிருந்தப் போது, அவளின் கைப்பேசி சினுங்கியது. டிஸ்ப்ளேவில் தெரிந்தப் பெயரைப் பார்த்து விட்டு புன்னகை மின்ன எடுத்துப் பேசினாள்.

  

“ஹலோ ஷீலா, சொல்லுப்பா”

  

ஷீலா அதே அலுவலகத்தில் வேறுத் துறையில் பணியாற்றுபவள்.

  

“சௌ, ஒரு சின்ன ஹெல்ப் வேணும்ப்பா!”

  

“என்ன விஷயம்ன்னு சொல்லு.”

  

“எங்க ஊர்காரர் ஒருத்தர் ஃபைல் உங்க டிபார்ட்மென்ட்டில் இருக்கு. கொஞ்சம் ஃபாஸ்ட்டா மூவ் செய்ய ஹெல்ப் செய்யனும்...”

  

“ஏதாவது பிரச்சனை இருக்க ஃபைலா?”

  

“இல்லைப்பா! கவர்ன்மென்ட் ரப்பர் procurement பத்தின ஃபைல். எல்லாம் பக்காவா இருக்கு. கொஞ்சம் டிலே ஆகாமல் மூவ் செய்யனும் அவ்வளவு தான்!”

  

“ஓகே! நீ டீடெயில்ஸ் சொல்லு, நான் பார்த்து சொல்றேன்...”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.