(Reading time: 4 - 8 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

விட்டான். ஷில்பா பிரீத்தியிடம் போவதை உறுதி செய்து விட்டு ஏஞ்சலிடம் திரும்பினான்.

  

"ஷில்பா என்னோட அண்ணன் பொண்ணு. அவங்க என் அண்ணன் மனைவி. அவங்களுக்காக என் அண்ணன் காட்டேஜ் புக் செய்தான்." அதை சொன்னப் போது அதுலின் உதடுகளில் குறும்பு கலந்த புன்னகை உதயமாகி இருந்தது.

  

ஏஞ்சல் தானாக அசடு வழிந்தாள். மெல்ல சிரித்து சமாளித்தவள், "நான் தப்பா புரிஞ்சுக் கிட்டேன்னு புரியுது," என்றாள்.

  

"நீங்க வெகேஷனுக்கு வந்திருக்கீங்களா?" முதல் தடவையாக அவளிடம் விபரம் கேட்டான் அதுல். பிறகு தான் ஞாபகம் வந்தவனாக, "என் பேர் அதுல்!" என்றான்.

  

"நான் ஏஞ்சல்!" என இலகுவாக தன் பெயரை சொன்னவள், "நான் வெகேஷனுக்காக வரலை. வேலையா வந்திருக்கேன். ஒரு ரிசெர்ச் செய்யனும்." என அவனுடைய முதல் கேள்விக்கு பதிலும் சொன்னாள்.

  

ஷில்பா இப்போது அழ ஆரம்பித்திருந்தாள்.

  

ப்ரீத்தியின் காலைக் கட்டிக் கொண்டு மெதுவாக தேம்பிக் கொண்டிருந்தாள். சத்தம் வராமல் அழ அவள் முயற்சி செய்வது தெரிந்தது.

  

ப்ரீத்தி மொபைலில் மும்முரமாக பிரவுஸ் செய்துக் கொண்டே ஷில்பாவை தேற்ற முயன்றுக் கொண்டிருந்தாள்.

  

ப்ரீத்தி வேறு அறைகள் இருக்கிறதா ஏன்று தேடிக் கொண்டிருக்கிறாள் என்பது அதுலுக்கு புரிந்தது.

  

"ஓகே, மிஸ் மீட்டிங் யூ, ஏஞ்சல். நான் பக்கத்துல வேற எங்கேயாவது அகமொடேஷன் கிடைக்குதான்னு பார்க்கிறேன். பை," என எஞ்சலிடம் சொல்லி தன் குடும்பத்தினர் பக்கம் செல்ல திரும்பினான் அதுல்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.