வைக்காதீங்க, சரியா?"
"ம்ம்ம்ம்... உங்க அண்ணிக்கு இதெல்லாம் தெரியுமா?"
"அண்ணிக்கு சொல்லவே வேண்டாம், அவங்களுக்கே விஷயம் தெரியும்.... இருந்தாலும் நம் வீட்டில் இருக்கும் இரண்டு புத்திசாலிகளையும் ரொம்ப யோசிக்க விடாமல் தடுக்க தான் முதல்ல உங்க ரெண்டு பேருக்கு மட்டும் சொல்றேன் சரியா?"
"இந்த ஐஸ் எல்லாம் எனக்கு வேண்டாம்... நீ எப்படி ஸ்ருதிக்கு டெஸ்ட் வச்சியோ அதே போல் நானும் உன் ஆளுக்கு எக்ஸாம் வைப்பேன்... பாஸ் மார்க்காவது எடுத்தால் தான் கன்சிடர் செய்வோம்..."
கற்பகமும், விவேக்கும் பேசிய கடைசி சில வாக்கியங்களை கேட்ட படி வந்த உமா,
"நல்ல ஆளுக்கு தான் டெஸ்ட், எக்ஸாம் எல்லாம் வைக்குறீங்க அத்தை... அதெல்லாம் தேவையே இல்லை, இவங்க ஹன்ட்ரட் பெர்செண்ட் பாஸ் தான்..."
"உனக்கு யார்ன்னு தெரியுமா, உமா?
"ஒரு கெஸ் இருக்கு அத்தை.... உங்களுக்கும் தெரிஞ்சவங்க தான்..."
"ஏன் விவேக், உமா சொல்வது சரியா? யாருடா அது? இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் இல்லாமல் சொல்லேன்..."
"சாரி அம்மா... நோ சான்ஸ்... நாளை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்... அண்ணி, நீங்க இப்போ இப்படி கெஸ் வேலை எல்லாம் செய்யாமல் நாளைக்கு முழுசா தெரிஞ்ச பிறகு அம்மா கிட்ட சொல்லுங்க..."
தொடரும்...