வேலை செய்யனும்னு கிடையாது விவேக் சார். நீங்க ரெடி ஆனதும் சொல்லுங்க, போதும்!" என்றான்.
இப்போது விவேக் அவனுக்கு பதில் சொல்லும் முன்பு அக்ஷரா, "உன் கிட்ட நம்பர் எல்லாம் இருக்கு தானே விவேக்? அப்புறம் தெரியாத ஊருல கண்டுப்பிடிக்க முடியாது!" என்றாள்.
சான்விக்கே விவேக்கை பார்த்து பாவமாக இருந்தது. அதனால் ஆதித்யா அடுத்து பேசுவதற்கு முன்பாக, "இதை எல்லாம் பொறுமையா ப்ளான் செய்தா போச்சு. எவ்வளவு நேரம் எர்போர்ட்லேயே அவங்க நிப்பாங்க, லாங் ட்ராவல் வேற செஞ்சு வந்திருக்காங்க. பெட்டியை தூக்கு ஆதி!" என்றாள்.
ஆதித்யா மறுப்பேச்சு பேசாது இரண்டு பெட்டிகளையும் உருட்ட தன் இரு கைகளில் பற்றிக் கொண்டான்.
அக்ஷரா மறுப்பு சொல்லாமல் ஹாயாக சான்வி பக்கத்தில் வந்து நின்றாள். விவேக் ஆதித்யாவிடம் இருந்து தன் பெட்டியை வாங்க முயற்சி செய்தான். ஆதித்யா அதற்கு இடம் கொடுக்கவில்லை.
"பரவாயில்லை விவேக் சார். நீங்க எனக்கு பெரிய அளவு ஹெல்ப் செய்திருக்கீங்க. இது எல்லாம் ஒன்னும் கிடையாது," என சொல்லி பெட்டியை அவனே உருட்டிக் கொண்டு நடந்தான்.
அக்ஷரா சான்வியின் கையை பிடித்துக் கொண்டாள். சான்விக்கு ஆச்சர்யமாக இருந்தது.
"என் மேல உங்களுக்கு கோபமா?"
சான்வி உடனடியாக அக்ஷ்ராவிற்கு பதில் சொல்லாது மறுப்பக்கம் அவளை உரசுவதுப் போல நடக்கத் தொடங்கி இருந்த விவேக்கை ஒரு முறை பார்த்து விட்டு அக்ஷரா பக்கம் முகத்தை திருப்பினாள்.
விவேக் அவளின் செய்கையைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டானோ பாக்கெட்டில் இருந்து