(Reading time: 5 - 10 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

"ஒ, அவ்வளவு ட்ராவல் செய்வீங்களா? ஏதாவது இன்ட்ரஸ்டிங் ப்ளேசஸ் போய் இருக்கீங்களா?"

  

"பெருசா எதுவும் இல்லை. சவுத்ல எரிமலை ஒன்னு திடீர்னு வெடிச்சப்போ போய் கவர் செய்திருக்கேன்."

  

"வாவ்! இவ்வளவு அட்வேஞ்சரஸ் பொண்ணு நீங்கன்னு நான் நினைக்கவே இல்லை."'

  

"அதனால என்ன, இப்போ நினைக்க ஸ்டார்ட் செய்ங்க!" என சொல்லி மீண்டும் புன்னகை புரிந்தாள் ஏஞ்சல்.

  

"உங்க பேமிலி எங்கே இருக்காங்க?"

  

"என் மாம் டாட் இரண்டுப் பேரும் பெரிய லெவல் எக்சிக்யூட்டிவ்ஸ். ஆல்மோஸ்ட் டெய்லி ட்ராவல் செய்துட்டு இருப்பாங்க."

  

"இப்போ தெரியுது உங்க ட்ராவல் லைப்ஸ்டைல் எங்கே இருந்து வந்ததுன்னு!"

  

"யப்! நாங்க ட்ராவலிங் பேமிலி. ஓகே, சீ யூ இன் தி மார்னிங்!" ஏஞ்சல் புன்னகையோடு பேச்சை முடித்து எழுந்துச் சென்றாள்.

  

அதுல் அவள் போனப் பிறகும் அவளுடன் பேசியதை யோசித்து புன்னகைப் புரிந்துக் கொண்டிருந்தான்.

  

பேச்சின் இடை இடையே ஏஞ்சல் முகத்தில் வந்துப் போயிருந்த புன்னகை அவனை இப்போதும் புன்னகைக்க வைத்தது.

  

ஷில்பா ஓடி வந்து அவன் அருகே வந்து நின்றாள்.

  

"எனக்கு பசிக்குது."

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.