This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
Oh, I'm good at keepin' my distance
I know that you're the feelin' I'm missing
You know that I hate to admit it
But everything means nothin' if I can't have you
ஹரீஷின் காரில் இருந்த ம்யூசிக் ப்ளேயரில் ஷான் மென்டீஸின் இனிமையான குரல் பாடியது. கண்ணில் இருந்து மெல்ல மெல்ல மறைந்துக் கொண்டிருந்த அம்மா, அப்பா, தம்பிக்கு நிலா இன்னும் கை அசைத்து விடை பெற்றுக் கொண்டிருந்தாள்.
ஹரீஷும், நிலாவும் வரும் போது வரவேற்க ஏதுவாக மஹாலக்ஷ்மியும், விஷ்ணுவும் சீக்கிரம் கிளம்பி இருந்தார்கள். அதனால் இப்போது புது மணமக்கள் மட்டும் தனியாக பயணம் செய்தார்கள்.
நிலா ஒரு வழியாக ‘டாட்டா’ சொல்வதை நிறுத்தி நேராக உட்கார்ந்தாள். சாலையில் கவனம் வைத்துக் கொண்டே ஹரீஷ் நிலா முகத்தை ஆராய்ந்தான்.
“என்ன சுபி ஒரு சொட்டு கண்ணீரையும் காணும்? உனக்காக எத்தனை பேப்பர் டிஷூ எடுத்து ரெடியா வச்சிருக்கேன்னு பாரு,” – ஹரீஷ் புகார் செய்யாமல் கலாட்டா செய்தான்.
ஹரீஷ் காட்டிய இடத்தில் அடுக்கி வைத்திருந்த பேப்பர் டிஷுவில் இரண்டை எடுத்து ஹரீஷிடம் கொடுத்தாள் நிலா.
“எனக்கு எதுக்கு?” – ஹரீஷ்.
“என் அப்பா கூட நிறைய நேரம் பேசிட்டு இருந்தீங்களே. எப்படியும் சென்டிமென்ட் பேச்சா பேசி உங்களை உருக வச்சிருப்பாரு. அதுக்கு தான்,” – நிலா.
“மாமா புதுசா எதையும் சொல்லலை. எல்லா அப்பாவும் சொல்றதை சொன்னார். என் பொண்ணு பட்டு, பட்டுன்னு பேசுவா ஆனால் மனசு பூ மாதிரி ---- ஏன் சுபி அப்போ பூ மாதிரி அமைதியா பேசுறவங்க மனசெல்லாம் பட்டு, பட்டுன்னு இருக்குமா?” – ஹரீஷ்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.