This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
பொறுமையாக ஆராய்ந்து அறிந்து எதையும் செய்யும் இனியவன் சுந்தரியையும் காணோம் சரிதாவையும் காணோம் என்ற உடன் பயந்துப் போனான்.
என்ன என்னவோ யோசித்து குழம்பியவன் சரிதாவுடைய மிஸ்ட் கால் ஞாபகம் வரவும் மொபைலை எடுத்து சரிதாவின் நம்பரை அழைத்தான். அந்த பக்கம் ரிங் போனதே தவிர எடுக்கவில்லை.
சரிதாவை பற்றி யாரைக் கேட்கலாம் என்ற கேள்வியுடன் அங்கிருந்த மற்றவர்களை பார்த்தான். சரிதாவின் பிரென்ட் ஒருத்தரும் கண்ணில் படவில்லை.
வீட்டில் இருந்து கிளம்பும் போது அவனுடைய அப்பா சுந்தரியுடைய மொபைல் பற்றிக் கேட்டாரே. ஞாபகம் வரவும் சுந்தரியுடைய மொபைல் நம்பரை போனில் அழுத்தினான்.
இரண்டு மூன்று ரிங்குகளுக்குப் பிறகு அழைப்பு ஏற்கப்படவும் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
“சுந்தரி எங்கே இருக்க?” – எவ்வளவு முயற்சி செய்தும் அவனுடைய குரல் பதற்றம் குறையாமல் ஒலித்தது.
“இனி, நான் சரிதா பேசுறேன். 2 மினிட்ஸ்ல வரோம்” – கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல சரிதாவின் குரல் கேட்டது.
“சுந்தரி எங்கே சரிதா? அவக் கிட்ட போனைக் கொடு”
“நீ வேற இனி! இரண்டு நிமிஷத்துல போன் செய்றோம். பை”
“சரிதா!” – அந்த பக்கம் அழைப்பு கட்டாகி இருந்தது.
சரிதாவும் சுந்தரியும் ஒன்றாக இருக்கிறார்கள். நிம்மதி உணர்வு பரவ இரண்டு நிமிடங்கள் பொறுமையாக காத்திருந்தான்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.