"இதை எல்லாம் விட மதுவிற்கு பாரதி மேல் இருக்கும் அட்டாச்மென்ட்டும் கூட ஒரு காரணம்... மது இப்போ எல்லாம் எவ்வளவு மாறி போயிருக்கிறாள்? அதற்கு காரணம் பாரதியும் பவித்ராவும் தான்..."
"சரி தான்டா.... போதும் போதும், உன் பாரதி புராணம், உனக்கு வாய் வலிக்குதோ இல்லையோ, எனக்கு காது வலிக்குது..."
"அம்மா!!!"
"பின்னே என்னடா, பார்த்தேன் பிடிச்சதுன்னு உண்மையை சொல்ல வேண்டியது தானே? அதை விட்டுட்டு, கதை சொல்ற?"
"கதையா?"
"சரி அதை விடு... உமா என்னவோ பாரதி உன்னைப் பிடிக்கலைன்னு சொன்னாள்ன்னு சொன்னா..."
"பிடிக்கலைன்னு சொல்லலை அம்மா... ஸ்டுடென்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ் கூட எல்லாம் ரொம்ப க்ளோஸா பழகவே முடியாது அப்புறம் கல்யாணம் எல்லாம் எப்படின்னு சொன்னாள்... ஆனால் அண்ணிக்கு எப்படி இது தெரியும்??"
"பவித்ரா உமா கிட்ட சொன்னான்னு நினைக்கிறேன்... அப்போ நீ இன்னும் மூணு வருஷம் வெயிட் செய்ய வேண்டியது தானா? அடடா பாவம்டா நீ..." என்றாள் கற்பகம் கேலியாக.
முறைத்து விட்டு,
"கிண்டலா? இருங்க, இருங்க, இதற்காகவே, சீக்கிரம் பாரதியை சம்மதிக்க வைக்கிறேன்..." என்றான் விவேக் வீறாப்புடன்!
"டேய் நான் சொல்வதைக் கேள்... நானோ, ரமேஷுடைய அம்மாவோ, அவள் கிட்ட