This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“யெஸ் நவ்யா, ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட். ஹரியும் புரிஞ்சுப்பார். நோ வொரிஸ். நெக்ஸ்ட் டைம் மறந்துப் போனா எனக்கு டெக்ஸ்ட் செய்ங்க. நான் இமீடியட்டா ஹெல்ப் செய்றேன்” – இனியவன் போனில் இனிமை சொட்ட(!!!) பேசிக் கொண்டிருந்தான்.
சனிக்கிழமை என்பதால் அவனுக்காக அவர்களின் அறைக்கே ஹார்லிக்ஸ் எடுத்துக் கொண்டு வந்த சுந்தரி, இனியவன் பேசியதை முழுவதுமாக கேட்டாள். வேலை விஷயமாக பேசுகிறான் என்பது அவளுக்கும் புரிந்தது. இருந்தாலும் “நவ்யா’ என்ற பெயர் அதில் வரவும் அவளுக்கு எரிச்சலாக இருந்தது. எப்போதுமே நவ்யா பேச்சு தானா??!!
இனியவன் அவள் வந்திருப்பதை கவனித்ததும், காதில் வைத்திருந்தப் போனை காண்பித்து போன் பேசுவதை சொன்னான்.
ஒன்றும் சொல்லாது, மெளனமாக ஹார்லிக்ஸை அவனிடம் கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள் சுந்தரி.
கோமதியும், கஸ்தூரியும் இருந்ததால் அவளுக்கு செய்ய வீடு வேலை எதுவுமில்லை. அருணாச்சலம் டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார். ஜெயஸ்ரீ பெண்கள் மாத இதழ் ஒன்றை படித்துக் கொண்டிருந்தாள்.
செடிகள் பக்கம் போய் எதையாவது செய்யலாமா என்று யோசித்தாள். அருணாச்சலம் நிறைய விதைகள் விதைத்து வைத்திருப்பது ஞாபகம் வரவும், வேண்டாம் என்று முடிவு செய்தாள். வேற என்ன செய்யலாம் என்று யோசித்து விட்டு, நேராக ஜெயஸ்ரீயிடம் சென்றாள்.
“மாமி! அ-த்-தை---”
கையில் இருந்த புக்கை தாழ்த்தி சுந்தரியை என்ன என்ற பார்வை பார்த்தாள் ஜெயஸ்ரீ.
“இனியவன் பக்கத்துல இல்லையே, அப்புறம் எதுக்கு அ, த், தைன்னு குழந்தை மாதிரி டைப் அடிக்குற, சுந்தரி? மாமின்னே கூப்பிடு!”
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.