ஊட்டி
சீக்கிரமாகவே இருட்டி விட பூபதிக்கு ஆச்சர்யமாக இருந்தது
”என்னடா இது இப்பவே இருட்ட ஆரம்பிச்சிடுச்சே, என்ன ஊர் இது” என முணுமுணுத்தபடியே அன்னத்திடம் சென்றவன்
”அக்கா” என உரிமையாக அழைக்க அன்னமும்
”சொல்லு தம்பி”
”என்னக்கா இந்த ஊர் இப்படியிருக்கு, இவ்வளவு சீக்கிரம் இப்படி ராபொழுது போல மாறிடுச்சே“
”இந்த ஊர் இப்படித்தான், இன்னும் கொஞ்ச நேரத்தில பனி பொழிய ஆரம்பிச்சிடும், குளிர் அதிகமாயிடும் ஸ்வெட்டர் கொண்டு வந்திருக்கல்ல”
”அய்யோ அக்கா எனக்கு இதெல்லாம் தெரியாதே, என்கிட்ட ஸ்வெட்டர் இல்லையே”
”அடடா என்னப்பா நீ இப்டி சொல்ற, குளிர் வந்தா என்ன செய்வியாம்”
”இது இரும்பு உடம்புக்கா, எத்தனை நாள் வயல்ல ராகாவல் இருந்திருக்கேன்”
”அது வேற, இது வேற, இங்க அடிக்கற குளிர்ல நீ உறைஞ்சிப் போயிடுவ இரு இரு அந்தாளோட ஸ்வெட்டர் ஏதாவது இருக்கான்னு பார்த்து சொல்றேன்” என பேச அதற்குள் அவசரமாக அங்கு வந்தான் பொன்னுசாமி
”இதப்பாரு என்னோட உடைமைகளை கண்டவனுக்கு எடுத்துக் கொடுத்த தொலைச்சிடுவேன்” என அன்னத்தை மிரட்ட அந்த கண்டவன் என்ற வார்த்தை பூபதியின் மனதில் நெருஞ்சி முள்ளாக தைக்க அவன் உடனே அங்கிருந்து வெளியேறி சென்றுவிட்டான், அதைக்கண்ட
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.