(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

பாரதி அப்போதும் அமைதியாக இருக்கவும்,

  

"சொல்லு பாரதி, மனதில் ஏதாவது இருந்தால் சொல்லு... இன்னைக்கு உன் வாழ்வில் ஒரு சந்தோஷமான நாள், எந்த குழப்பமும் இருக்க கூடாது..." என்று உமாவும் சொன்னாள்.

  

அவர்கள் இருவரையும் அமைதியாக பார்த்த பாரதி,

  

"ப்ச்... நீங்க இரண்டு பேரும் ஹைப் கொடுக்கும் அளவிற்கு எதுவும் இல்லை... இது கன்வீனியன்ஸ்க்காக நடந்த கல்யாணம் தானே?" என்றாள்.

  

"என்ன???"

  

"பின்ன என்ன? விவேக்கிற்கு என் மீது தனியான அன்பு எல்லாம் இல்லை... எனக்கு ஒரு பாதுகாப்பு, அவருக்கு வேறு விதத்தில் நன்மை..."

  

"வேறு என்ன நன்மை?" என்றாள் உமா குழப்பத்தோடு.

  

"பணத்தை பற்றி சொல்கிறாயா பாரதி?" எனக் கேட்டாள் பவித்ரா கோபத்தோடு.

  

"பவி, நீ கோபப் படும் படி நான் எதுவும் சொல்லலை... விவேக்கிற்காக நானாகவே தான் அந்த பணம் கொடுத்தேன்... பட் அதுவும் கூட ஒரு ரீசன் தானே?"

  

"ச்சச்சே... அப்படி இல்லை பாரதி...” என்றாள் உமா அவசரமாக.

  

தோழியின் அருகில் அமர்ந்த பவித்ரா, அவளின் கையை அன்புடன் பற்றியபடி,

  

"பாரதி, இதை எல்லாம் நான் முன்பே உன்னிடம் சொல்லி இருக்கனும், ஆனால் நீ எப்படி எடுத்துக் கொள்வாய் என்று புரியலை... விவேக் உன்னை பார்க்க ஹாஸ்டல் வருவது பற்றி நான் ரமேஷிடம் சொன்னேன்...." என்று தொடங்கி, விவேக் அவர்களின் வீடு வந்து பேசி,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.