This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஒரு சில மணி நேரங்களில் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்தது.
அந்த ஊரின் பெரிய மனிதர்கள், தமிழ்ச்செல்வி முன்பு பார்த்திராதவர்கள் சிலர் என யார் யாரோ வந்து இருந்தார்கள்.
“என்னோட இரண்டுப் பொண்ணுங்களை காப்பாத்தி கரை சேர்க்குறதே கஷ்டம், இதுல மூத்தவ பொண்ணை எல்லாம் என்னால சுமக்க முடியாது. நீங்க தான் பேசி ஒரு முடிவுக்கு வரனும்.”
எதிர்பார்த்ததையே சித்தி பேச தமிழ்ச்செல்வியின் வயிற்றினுள் புளியை கரைத்தது!
“என்னம்மா இப்படி பேசுற, தமிழும் சின்னப் பொண்ணு! உன் மகளைப் போல பார்த்துக்க கூடாதா?”
கூட்டத்தில் யாரோ ஒருவர் அவளுக்காகப் பேசினார்.
“அவ எக்கேடோ கெட்டுப் போகட்டும்ன்னு நான் விட்டுட்டுப் போயிருந்திருக்கலாம். அப்படி செய்யாம அவ தாய் மாமனை கூப்பிட்டு உட்கார வச்சுப் பேசிட்டு இருக்கேனே, இதை விட வேறென்ன செய்யனும்?”
தாய் மாமன் என்றால் அவள் அம்மாவின் சகோதரனா? ஆர்வத்துடன் ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள் தமிழ்.
சித்தி பார்த்து பேசிக் கொண்டிருந்த பக்கம் நரைத்துப் போன பரட்டை தலையுடன், பீடி பிடித்த படி ஒருவர் அமர்ந்திருந்தார்.
“இங்கே பாருங்க ஓடிப் போனவளையே நான் மறந்தாச்சு. அப்புறம், அவப் பொண்ணை எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?”
கரகரப்புடன் தெளிவில்லாமல் கொழ கொழ என ஒலித்த அந்தக் குரலில் ஏமாற்றத்துடன் பார்வையை திருப்பியவள், அவளின் தாய் மாமனின் அருகே அமர்ந்திருந்தவன் ஒருவன்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.