This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
Your kiss on my cheeks is one of the cutest things I have ever known…
மீண்டும் சுபாஷ் பக்கம் கவனத்தை திருப்பினாள் நிலா.
“ஹலோ சுபாஷ். எப்போ சென்னை வந்தீங்க?” எந்த டென்ஷனோ, குழப்பமோ இல்லாமல் சாதாரணமான குரலில் புன்சிரிப்புடன் பேசினாள் நிலா.
சுபாஷே குழம்பிப் போய்விட்டான் என்பது அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
“இவர் என் கணவர் ஹரீஷ். எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள் தான் ஆச்சு,” ஹரீஷை சுபாஷிற்கு அறிமுகம் செய்து வைத்தாள் நிலா.
ஹரீஷும், சுபாஷும் ஒருவரை பார்த்து பார்த்துக் கொண்டார்கள். இருவர் பார்வையிலும் பெயருக்கும் நட்பு இல்லை.
அவன் வேண்டாம் என்று ஒதுக்கியவளுக்கு இப்படி ஒரு மிடுக்கான கணவனா? சுபாஷின் மனம் குரோதத்தில் கொந்தளித்தது.
ஹரீஷ் கண்ணுக்கு சுபாஷ் ஒரு புழுவைப் போல தெரிந்தான். என் நிலாவின் மனதை கஷ்டப்படுத்தியவன் இவன்!! ஹரீஷ்க்கு பழக்கமே இல்லாத கோபம் பொங்கியது.
ஆனால், அதை விட மிகப் பெரிய கேள்வி ஒன்று ஹரீஷை அலைக்கழித்தது!
அவன் நிலாவை இங்கே அழைத்து வந்த காரணம் என்ன, இங்கே நிலா நடந்துக் கொள்வது என்ன?
ஏன் நிலா சுபாஷிடம் கோபப் படவில்லை? வருத்தப் படவில்லை?? கேள்வி கேட்கவில்லை???
ஹாயாக அவனை கணவன் என்று அறிமுகப் படுத்தி அல்லவா வைக்கிறாள்??
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.