This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
திடீரென கேட்ட ஸ்ரேயான்ஷின் குரலில் துள்ளிக் குதிக்காதக் குறையாக திரும்பிப் பார்த்தாள் ரச்னா...
“நீங்க.... எப்படி..... இங்கே.....???” ஸ்ரேயான்ஷை அங்கே பார்ப்பதை நம்ப முடியாமல் கேட்டாள்...
அவளின் கேள்விக்கு பதில் சொல்லாது,
“ஐ ஆம் சாரி, ரச்னா... என்னை மன்னிச்சிடு...” என்றான் ஸ்ரேயான்ஷ்.
ஸ்ரேயான்ஷின் மன்னிப்பு ரச்னா மறந்திருந்த நாட்களை தானாக நினைவுப் படுத்த, அவளின் முகத்தில் இருந்த மலர்ச்சி காணாமல் போனது...!
“நீங்க இங்கே இப்படி நேரா வந்ததும் நல்லது தான்...! நாம டிவோர்ஸ் வாங்க வசதியா இருக்கும்.... நாம் ம்யூச்சுவலா பிரிஞ்சிருவோம், ஸ்ரேயான்ஷ் ” என்றாள் ரச்னா திடமான குரலில்!
ரச்னாவின் குரலில் இருந்த திடம் ஸ்ரேயான்ஷை பாதிக்கத் தான் தான் செய்தது. ஆனால், அவன் தன் நிதானத்தை இழக்கவில்லை...
கணவன் மனைவி உறவில் பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடே இல்லை. எல்லா உறவுகளையும் போல, Ups & downs இவர்களுக்கும் உண்டு...
அதுப் போன்ற மாற்றங்கள் ஏற்படும் போது, யாரேனும் ஒருவராவது புரிந்துக் கொண்டு, விட்டுக் கொடுத்து நடந்தால் அந்த உறவு மேம்பட்டு இனிக்கிறது...
அதுவே இருவரும் புரிந்துக் கொள்ளாதவர்களாக மாறும் போது கசந்துப் போகிறது...!
ரச்னா எப்போதுமே ஸ்ரேயான்ஷின் வேலைப் பளுவை உணர்ந்தே நடந்துக் கொண்டாள்...
குழந்தை இல்லாததால் வந்த தனிமை, குத்தல் பேச்சுகள் என்று அவளை சுற்றிப் பிரச்சனைகள் வந்தப் போது, வெகு இயல்பாக அவளின் மனம் கணவனை நாடியது.... ஆனால்,
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.