(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இப்படி வெகு இயல்பாக சொந்தம் கொண்டாட முடிகிறது என்று மனதில் எரிச்சல் பட்டாள் பாரதி.

  

வள் முகத்தைப் பார்த்தவன், அவள் அருகில் நகர்ந்து, ஒரு விரலால், அவள் முக வடிவை அளந்தப்படி,

  

இதில் கோப பட என்ன இருக்கு என் செல்ல ரதி மேடம்?” என்றான் கொஞ்சலாக!

  

கொஞ்சியவனைப் பார்த்து,

  

நான் சம்பந்தப் பட்ட விஷயத்தில் என்னைத் தவிர எல்லோரும் இன்வால்வ் ஆகி இருக்கீங்க... ஆனால் எனக்கு தான் எதுவும் தெரியலை...” என்றாள் பாரதி புகார் சொல்பவளாக!

  

அவளின் கோபத்தை ரசித்த விவேக், இன்னமும் அவள் அருகில் நெருங்கி உரசியப்படி அமர்ந்தான். அவள் முகத்தை கரங்களில் ஏந்தியப்படி, அவள் கண்களை நேராகப் பார்த்தவன்,

  

இது அநியாயம் ரதி... என்ன பார்க்கிற? நான் உன்னிடம் எப்போதோ ப்ரொபோஸ் செய்தேன்... அதுக்கு நீ நோஸ் கட் கொடுத்தப் பின்பும் எத்தனை முறை உன்னை தேடி தேடி வந்தேன்... உனக்கு ஞாபகம் இருக்கா ஃபர்ஸ்ட் டைம் உன்னை பார்க்க ஹாஸ்டல் வந்தப் போது, தலைக்கு குளித்து, இப்படி தான் தேவதைப் போல் வந்தாய்... அசந்துப் போனேன் தெரியுமா?”

  

ம்ம்ம்...”

  

உனக்கெங்கே தெரியும் என்னுடைய நிலைமை? அதன் பின் உன்னைப் பார்க்க ஏன் வேலை மெனக்கெட்டு சனிக்கிழமை வந்தேன்? எப்போதாவது யோசித்திருக்கிறாயா? எப்போதும் போல் ஃபார்மலா இல்லாமல், நீ இயல்பாக வீட்டில் இருப்பதுப் போல் இருப்பதை பார்க்க ஆசை... உன்னுடைய இந்த நீண்ட கூந்தலை இப்படி பார்க்க ஆசை...”

  

அவள் கூந்தலில் கைகளால் மெதுவாக வருடியப்படி பேசியவனின் பேச்சை கேட்டபடி, தன்னை மறந்து அமர்ந்திருந்தாள் பாரதி. அவனுக்காக என்று ஈரக் கூந்தலைப் பின்னி வந்ததும், அவன் முகத்தில் ஏமாற்றம் கண்டு என்ன விஷயம் என்று யோசித்ததும் இப்போது

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.