வருடம் 2024 மாதம் பிப்ரவரி தேதி 29
”அபி” என பாசமாக அழைத்தார் கோகுல்ராஜ் அவருக்கு எதிரில் நின்றிருந்தாள் அபிநயா. இன்னும் கோகுல்ராஜ் ஜெயிலில் இருந்து விடுபடவில்லை. இன்னும் சில மாதங்கள் உள்ளன. தன் மகளின் பிறந்த நாளை எண்ணி மகிழ்ந்துக் கொண்டிருந்தார்
அவர் ஜெயிலுக்கு சென்ற நாளில் இருந்து யாருமே அவரை காண செல்லவில்லை அபிநயா உள்பட. ஆனால் இன்று ஏனோ கோகுல்ராஜ் மிகவும் சந்தோஷத்தில் இருந்தார் என்ன ஆனாலும் சரி பிறந்தநாள் அன்று தன் மகள் தன்னை தேடி வருவாள் என நம்பிக்கையில் காத்திருந்தார் அவரின் நம்பிக்கை வீணாகவில்லை.
அபியே தன் தந்தையை தேடி வந்திருந்தாள் கூடவே அன்பரசனும் வந்திருந்தான், கோகுல்ராஜ் எப்பேர்ப்பட்ட தொழிலதிபர் ஆனால் இன்று அவர் உருவம் மாறியிருந்தது, மெலிந்திருந்தார் அபிக்கு அவளின் தந்தையை அவ்வாறு காண பிடிக்கவில்லை. வருந்தினாள் அவளின் வருத்தம் கண்ணீராக வெளிவர அதைக்கண்டு துடித்துப் போனார் கோகுல்ராஜ்.
”வேணாம்மா அழாத என்னை நினைச்சி நீ வருத்தப்படாத நான் செய்த தப்புக்குண்டான தண்டனைதான் இது” என சொல்ல அபியோ
”இன்னும் சில மாசங்கள்தான்பா அதுக்கு அப்புறம் நீங்க வெளிய வந்துடுவீங்க”
”பரவாயில்லைம்மா எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு வாத்தியார்க்கு நான் செய்த துரோகம் அவர் வீட்ல என்னால எத்தனை பேர் கஷ்டப்பட்டாங்க, அப்பவே இரண்டு உயிர் போயிடுச்சி அதுக்கு அப்புறம் யுவனால இரண்டு உயிர் போயிடுச்சி, இது எல்லாத்துக்கும் என்னோட சுயநலம்தானே காரணம் 4 பேரோட உயிர் போனதுக்குண்டான தண்டனையை நான் இப்ப அனுபவிக்கறேன்”
”ஆனா நீங்க கொலைகாரன் இல்லைப்பா”
”இல்லைன்னாலும் காரணகர்த்தா நான்தானே, எனக்கு இந்த தண்டனை தேவைதான் என்னை
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.