This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
I love you... Stay away from me.
நிலா `ஹரீஷிடம் சரண்டைந்தவளாக விழிகள் மூடி நின்றாள்.
“ஐ லவ் யூ சுபி,” ஹரீஷின் உதடுகள் காதலை அவள் காதில் முனுமுனுத்துக் கொண்டே இன்னுமொரு சூடான முத்தத்தை அவளின் காது மடலில் பதித்தது.
அவன் சொன்ன வார்த்தைகள் நிலாவுக்குள் வேறு விதமான பிரளயத்தை ஏற்படுத்தியது.
தன் முழு பலத்தையும் பயன்படுத்தி ஹரீஷை அவளை விட்டு தள்ளினாள்.
நிலா அப்படி செய்வாள் என்று எதிர்பார்த்திருக்காத ஹரீஷ் தடுமாறினான். ஆனாலும் கீழே விழாமல் சுதாரித்து நின்றான்.
நிலா பக்கத்தில் இருந்த சேலையை எடுத்து அப்படியே தன் மேலே போட்டுக் கொண்டாள்.
“ஹரீஷ், ரூமை விட்டு வெளியே போங்க!” நிலாவின் குரலில் கோபம் இருந்தது என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட என்ன உணர்வு இருந்தது என்றே ஹரீஷிற்குப் புரியவில்லை. அவனை நேராக கூட பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அவள் சொனனது அவனுக்கு என்னவோ போல இருந்தது.
“சுபி!”
“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம். முதல்ல இங்கே இருந்து போங்க!”
“நான் - - - சுபி - - -.“
“ஹரீஷ்!” நிலாவின் குரல் இப்போது அம்ப்ளிஃபை ஆகி அலறியது.
“போறேன். நான் போறேன்,” ஹரீஷ் அறையை விட்டு வெளியே வந்தான். நிலாவை திரும்பி
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.