(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 33 - பிந்து வினோத்

33. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

காஃபியுடன் அறைக்கு சென்ற பாரதி, காஃபியை மேஜையின் மீது வைத்து விட்டு, தூங்கி கொண்டிருந்த விவேக்கை எப்படி எழுப்புவது என்று தயங்கினாள். பின், மெதுவாக கணவன் பெயர் சொல்லி அழைத்தாள்.

  

எங்கேயோ கனவில் பாரதியின் குரல் கேட்டு புரண்ட விவேக், தூக்க கலக்கத்துடனே,

  

என்ன ரதி...” என்றான்.

  

விவேக் எழுந்துக்கோங்க, மணி எட்டு ஆக போகுது...”

  

ப்ச்...”

  

ப்ளீஸ் விவேக்...”

  

கஷ்டப்பட்டு கண்களை திறந்து பார்த்தவன், எதிரில் புத்தம் புது மலராக நின்ற மனைவியை இமைக்காமல் பார்த்தான். தூக்கம் எல்லாம் காணாமல் போனது... எழுந்திருக்க முயன்றவனின் தலை விண்ணென்று வலித்தது... தலையை பிடித்து விட்டு கண்களை மூடியவனின் முகத்தில் தென்பட்ட வலியின் ரேகைகளை கண்டு,

  

என்ன ஆச்சு விவேக்?” என பதறினாள் பாரதி.

  

அந்த பதற்றத்தில் தெரிந்த அவளின் அன்பை புரிந்துக் கொண்டவன்,

  

மை ஸ்வீட் ஏஞ்சல் ரதி, பெரிசா எதுவுமில்லை, தலைவலி...” என்றான்.

  

தலைவலியா, ஏன்?” என்றபடி அவனருகில் அமர்ந்தவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவன்,

  

அது அப்படி தான் ரதி, டைமுக்கு தூங்கலைனா வரும்... இதற்காக பயந்து எல்லாம் நான் டைமுக்கு தூங்க முடியுமா? அதுவும் இனிமேல் தூங்க முடியுமா?”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.