வருடம் 1980
பூசாரிபட்டி கிராம்
கிராம பழக்க வழக்கம் சம்பிரதாயம் சடங்கு கட்டுதிட்டம் என அனைத்திலும் ஊறிப்போன கிழவி ஒருத்தி சுந்தரேசனின் வீட்டிற்கு வந்தாள். அந்த கிராமத்திலேயே மிகவும் வயதானவள், அனுபவசாலியானவள் என்பதாலேயே ஊருக்குள் அவரின் மேல் மதிப்பு மரியாதையும் அதிகம், வயதானவர் முதல் சிறுபிள்ளை வரை அவருக்கு தலைவணங்குவார்கள், அவர் சொல்லிற்கு மதிப்பு தருவார்கள், இப்போது அவர் வரவும் அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்றார்கள், அவரை யாரும் அழைப்பதில்லை அவராகவே வருவார், திருமணம், காதுகுத்து, இழவு என அனைத்து விசேஷங்களுக்கும் அவராகவே கலந்துக் கொள்வார்.
கிழவியைக் கண்டதும் ஜானகியின் தாய் தந்தையருக்கு அதிர்ச்சியில் கைகால் நடுங்கியது. ஏற்கனவே இங்கு ஜானகிக்கு சடங்கு செய்ய வேண்டும் என ஆரம்பித்திருக்கிறார்கள், இந்நேரம் இவர் வந்தது அவர்களுக்கு சங்கடமாகிப் போனது, எப்படியாவது பேசியாவது அனைவரின் வாயையும் அடைப்பார்கள் ஆனால், கிழவியின் வாயை அடைப்பது அவ்வளவு சுலபமில்லை, தன் மகளின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடக்கூடாதென அவர்கள் பயத்தில் உறைந்தார்கள்.
இத்தனைக்கும் ஜானகியின் குடும்பம் அந்த ஊரிலேயே பெரிய குடும்பம்தான், நிலம் புலம், வீடுகள் என ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளது, அவர்களுக்கு இணையான சொத்துடையவர்தான் சுந்தரேசனின் தந்தை, அவரிடமும் ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளது, கௌரவத்திலும் சரி ஆஸ்தியிலும் சரி இரு குடும்பமே சரிக்கு சமமாக இருந்தது.
இந்த பக்கம் ஜானகியும் ராமமூர்த்திக்கு ஒரே பெண் அதே போல சுந்தரேசனும் அவனின் பெற்றோருகளுக்கு ஒரே மகன்
சுந்தரேசனின் உடல் இன்னும் வரவில்லை. அதற்குள் இங்கு பிரச்சனை கிளம்பிவிட்டது.
”சுந்தரேசுக்கும் ஜானகிக்கும் சின்னப்பவே ஒருத்தருக்கு ஒருத்தர்ன்னும் பெரியவங்களான
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.