(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

கண்ணை சிமிட்டிய படி பேசியவனின் குறும்பு புன்னகையில் மயங்கியவள், மெதுவாக அவனின் கேசத்தை கலைத்து விளையாடியப்படி இருந்தாள்.

  

ம்ம்ம்ம்... ரதி, இப்படியே உன் மடியில் படுத்திருந்தால் தலைவலி எல்லாம் பறந்து போயிடும்... படுத்துக்கவா?”

  

விவேக், கீழே எல்லோரும் நமக்காக சாப்பிட வெயிட் செய்துட்டு இருப்பாங்க...”

  

ப்ச்...”

  

ப்ளீஸ், எழுந்து வாங்க...”

  

நோ ரதி, தலைவலியோட சாப்பிட முடியாது...”

  

இது என்ன சின்ன குழந்தை மாதிரி விவேக்? இன்னைக்கு பவித்ரா வீட்டுக்கு வேற போகணும்...”

  

அட ஆமாம் மறுவீடுக்கு நம்ம மச்சான் வீட்டுக்கு போகணுமே...”

  

அது தான் வாங்க, சாபிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க...”

  

நீ இருக்கும் போது நான் எப்படி ரெஸ்ட் எடுப்பது...”

  

மீண்டும் கண் சிமிட்டி குறும்புடன் பேசியவனை, கண்களால் பருகினாள் பாரதி. விவேக் அவள் மேல் வைத்திருக்கும் அன்பும், அதை அவன் வெளி காட்டும் ஒவ்வொரு வினாடியும் அவளுக்கு தேனாக இனித்தது... திருமணமான புதிதில் எல்லா கணவன் மனைவியும் இப்படி தான் இருப்பார்களோ? ஆனால் சில நாட்களில் பலருக்கும் இந்த திருமண வாழ்வு வெறுத்து போவது ஏன்?

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.