(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அவள் மும்முரமாக உலக தத்துவம் யோசித்து கொண்டிருக்க, அவள் மடியில் படுத்தப் படி, அவளின் வளைக்கரத்தை பிடித்து விளையாடியப்படி அன்றைய நாளுக்கான திட்டம் தீட்டினான் விவேக்.

  

ரதி, மாத்திரை சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கினால் தலை வலி சரி ஆகிடும்... நான் போய் பிரஷ் பண்ணிட்டு வரேன், அந்த அலமாரியில் பேராசிட்டமோல் டேப்லட் இருக்கும் கொஞ்சம் எடுத்து வைக்குறீயா?”

  

அவள் சரி என தலையாட்டவும், எழுந்து நல்லபிள்ளையாக பல் துலக்க சென்றான் விவேக். படுக்கையை சரி செய்து விட்டு, அவன் சொன்ன இடத்தில் மாத்திரையை தேடினாள் பாரதி. அதற்குள் வந்து காஃபியை வேகமாக பருகிய விவேக்,

  

ரொம்ப தலை வலிக்குது ரதி, டேப்லட் கிடைச்சதா?” என அவசரமாக கேட்டான்.

  

மாத்திரைகளின் பேரை பார்த்து எடுத்த பாரதி,

  

இது ரொம்ப பவர் அதிகமா இருக்கே விவேக். வெறும் காஃபி மட்டும் குடிச்சுட்டு சாப்பிடலாமான்னு தெரியலையே...” என்றாள் சந்தேகத்துடன்.

  

ப்ளீஸ் பாரதி, அப்புறம் அது எல்லாம் பேசுவோம், டேப்லட் கொடு...”

  

விவேக்கின் பேச்சில் தெரிந்த வலியிலும், ரதி பாரதி ஆனதிலுமாக, அமைதியாக பேப்பரை பிரித்து அவனிடம் மாத்திரையைக் கொடுத்தாள் பாரதி. அவசரமாக விழுங்கியவன்,

  

சாரிடா கண்ணா, கொஞ்சம் நேரம் தூங்குறேன். அப்புறம் எல்லாம் சரியா போயிடும், ஓகே?” என்றப் படி மீண்டும் படுக்கையில் சரிந்துப் படுத்தான்.

  

அவனருகில் வந்து அவன் கேசத்தை மென்மையாக வருடிய பாரதி,

  

ஒரு பிரச்சனையும் இல்லை, நீங்க ரெஸ்ட் எடுங்க...” என்றாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.