This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
Love is like a puzzle, hard to piece together, but beautiful when all the right pieces are put together.
“உங்க ப்ரோபசர் கூப்பிடுறார் ஏன் போன் எடுக்காம இருக்கீங்க?” நிலா அவனிடமே நேரடியாக விசாரித்தாள்.
அவளின் அருகாமையை உணர்ந்து ஹரீஷ் திகைத்துப் போகவில்லை. நிலா பக்கம் பார்க்கவும் இல்லை. லேப்டாப்பையே பார்த்துக் கொண்டு பேசினான்.
“அந்த இன்வெஸ்டர் ஈமெயிலுக்கு ரிப்ளை ரெடி செய்துட்டு இருக்கேன் சுபி. ப்ரோபஸர் கிட்ட பேசினா அதை முடிக்க முடியாது!”
அவளைப் பார்க்காமல் பேசியவனின் அடர்த்தியான தலை முடியை ரசித்துக் கொண்டே பதில் சொன்னாள் நிலா.
“பேசிக் டீடெயில்ஸ் தானே கேட்டு இருந்தாங்க. சிம்பிளா சொன்னா போதாதா?”
“எல்லா டீடெயில்ஸும் இல்லாம சம்மரி போல கொடுக்கனும் சுபி. அதை டைப் செய்துட்டு இருக்கேன். ஆல்மோஸ்ட் முடிச்சாச்சு. ஒரு தடவை ரெவியூ செய்துட்டு அனுப்பனும்,” என்றான் ஹரீஷ் இப்போதும் அவளைப் பார்க்காமலே!
“நான் படிச்சு பார்க்கட்டுமா? நீங்க வேணா ப்ரோபசர் கிட்ட பேசுங்களேன்,” என்றாள் நிலா.
ஹரீஷ் யோசிக்காமல் ஆச்சர்யம் நிறைந்த விழிகளுடன் அவள் பக்கம் திரும்பினான். குறுஞ்சிரிப்புடன் நிலா நின்றிருந்தாள். அவளின் அந்த சிரிப்பு மீண்டும் மாலையில் நடந்ததை அவனுக்கு ஞாபகப் படுத்தியது. விழிகளை அவசரமாக திருப்பிக் கொண்டான்.
நிலாவால் அவனின் மனதில் இருப்பதை படிக்க முடிந்தது. எந்த தயக்கமும் இல்லாமல் அவனின் தோளை தொட்டு தட்டி எழுந்திருக்க சொன்னாள்.
“நான் பார்க்குறேன் ஹரீஷ். நீங்க பேசிட்டு வாங்க.”
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.