(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

இந்த ஊருக்கு வந்தது முதலே பல ஆண்கள் பல்வேறு விதங்களில் அவளுக்கு உதவுகிறேன் என்று முன் வந்திருக்கிறார்கள். அபினவும் அதையே சொல்லவும் அஹல்யாவுக்கு ஆயாசமாக இருந்தது.

  

எரிச்சலை அபினவிடம் நேராக காட்ட மனம் வராமல் மீண்டும் வாட்சைப் பார்த்தாள்.

  

“ஒரு அஞ்சு நிமிஷம் நடந்தா ஜங்க்ஷன் வரும். அங்கே இருந்து ஈசியா ஆட்டோ கிடைக்கும்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகுதுன்னா நீங்க ஆட்டோல போங்க. நான் ஸ்கூட்டியை மெக்கானிக் ஷெட்ல விட்டுட்டுப் போறேன்,” என்றான் அபினவ்.

  

அவனின் பேச்சு அஹல்யாவிற்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது!

   

அவளை அவனுடன் பைக்கில் வரச் சொல்வான் என்று அஹல்யா நினைத்திருந்தாள்.

   

பரவாயில்லை, இவன் மற்றவர்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானவனாக தான் இருக்கிறான்!

  

அஹல்யாவின் மனம் அமைதியானது!

  

“அரை மணி நேரம் நடக்கனும்னு சொல்றீங்களே. உங்களுக்கும் கஷ்டம் தானே?” என வினவினாள் அவள்.

  

“அது எல்லாம் எனக்கு ரொம்ப ஈஸிங்க!” என்றான் அபினவ்.

  

“ஆனா உங்க பைக்? அதை இங்கேயேவா விட்டுட்டுப் போகப் போறீங்க?”

  

“போலீஸ்ன்னு பைக்ல ஸ்டிக்கர் ஒட்டி இருக்கு. யாரும் தொட மாட்டாங்க. நான் உங்க ஸ்கூட்டியை ரிப்பேருக்கு கொடுத்துட்டு திரும்ப வந்து எடுத்துக்குறேன். நீங்க ஸ்கூட்டி சாவி தாங்க.”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.