(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“இல்லை, நானே ஸ்கூட்டியை ஷெட்ல விட்டுட்டுப் போறேனே?”

  

“என்ன அஹல்யா நீங்க? உங்க பழைய ஸ்கூட்டியை போய் நான் எடுத்துட்டு ஓடிப் போயிடுவேன்னு இப்படி பயப்படுறீங்க? வேணும்னா உங்க ஸ்கூட்டியை நான் ரிப்பேருக்காக எடுத்துட்டுப் போறேன்னு எழுதி சைன் போட்டுத் தரவா?”

  

எப்போதும் சீராக ஒரே மாதிரி முகத்தை வைத்துப் பேசும் அபினவ் முதல் முறையாக காமெடி கலந்துப் பேசவும், அவனுடைய முகமும் அதற்கு ஏற்ப மென்மையானது.

  

அதில் கவரப் பட்டு, ஒரு சில வினாடிகள் கூடுதலாக அவனை கவனித்த அஹல்யா, ஸ்கூட்டியில் இருந்த சாவியை அவனுக்குக் காட்டினாள்.

  

“ஓகே, நான் உங்க வண்டியை ரிப்பேருக்கு கொடுத்துடுறேன். இங்கே ஆட்டோ கிடைக்குறது கஷ்டம். ஃபைவ் மினிட்ஸ் நடந்தா கிடைக்கும். நீங்க...”

  

அவளை அவனோடு நடந்து வரச் சொல்ல அபினவ் தயங்குவது அவளுக்குப் புரிந்தது.

   

இவனைப் போய் தவறாக நினைத்து விட்டாளே!!!!

  

“வாங்க இரண்டுப் பேரும் நடப்போம்,” என அவளே அபினவை அழைத்தாள்.

  

அஹல்யா ஸ்கூட்டியின் ஸ்டாண்டை எடுத்து, வண்டியை உருட்டிக் கொண்டு நடக்கத் தொடங்க, அபினவ் அவசர அவசரமாக அவளை தடுத்து ஸ்கூட்டியின் ஹான்டில்பாரை பிடித்தான்.

  

இரண்டுப் பேரின் கைகளும் மெல்ல உரசிக் கொண்டன!

  

அஹல்யா அதை உணரும் முன்பே வேகமாக கையை விலக்கிக் கொண்டான் அபினவ். ஆனாலும் இன்னொரு கையால் ஸ்கூட்டியை பிடித்துக் கொண்டான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.