(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

நான் எதுவும் சொல்லலையா, ரொம்ப நல்லதா போச்சு... சரி, நீங்க டிரஸ் சேன்ஜ் செஞ்சு ஃபேஸ் வாஷ் செய்துட்டு கீழே வாங்க, டிஃபன் சாப்பிடலாம்.”

  

இரு ரதி... உனக்கு காலேஜ் திறப்பதில் நமக்கு ஓரு நல்ல விஷயம் இருக்கு. இனி மேல், மார்னிங் உன்னை நான் காலேஜ்ல டிராப் செய்துட்டு ஈவ்னிங்கும் பிக்கப் செய்றேன்... அப்போ நம்ம இரண்டு பேருக்கும் இன்னும் கொஞ்ச எக்ஸ்ட்ரா நேரம் தனிமை கிடைக்கும்.”

  

நல்ல ஐடியா தான்... ஆனால் மதுவும் அதே காலேஜில் தான் படிக்குறா... அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அவளை விட்டுட்டு என்னை மட்டும் எப்படி நீங்க ட்ராப் செய்ய முடியும், பிக்கப் செய்ய முடியும்?”

  

ம்ம்ம்... மது மார்னிங் பியானோ க்ளாஸ் போறா, ஸோ எப்போதும் அங்கே இருந்து தான் காலேஜ் வருவா... ப்ராப்ளம் இல்லை... ஈவ்னிங்... நாம ஏதாவது யோசிக்கனும்... எப்போவும் போல் நான் தான் இதுக்கும் ஏதாவது ஐடியா யோசிக்கனும்...”

  

ஹலோ, என்னவோ உங்களுக்கு மட்டும் ஐடியா...” என்று சொல்லத் தொடங்கிய பாரதி முழுவதுமாக பேசி முடிக்கும் முன், குறுக்கிட்டு,

  

பின்னே, இதை நீயே ஹான்டில் செய்து, என் ஹெல்ப் இல்லாமல், யாரும் அதுவும் குறிப்பா அம்மா எதுவும் சொல்லாமல் பார்த்துக்க முடியுமா?” எனக் கேட்டான் விவேக் சின்ன புன்னகை மின்ன!

  

அவன் விளையாட்டுக்கு சொல்கிறான் என்று தெரிந்தாலும், பாரதிக்கு ரோஷம் பொங்கியது!!! எனவே,

   

ஏன் அது என்ன அவ்வளவு கஷ்டமா?” என்றாள்!

  

நீ தான் சொல்லனும் ரதி...” என்றான் விவேக் அதே புன்னகை மின்ன!

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.