“ஓகே, நானே அத்தை கிட்டேயும் பெர்மிஷன் வாங்குறேன்...” என்றாள் பாரதி வீறாப்புடன்!
“பார்ப்போம்...”
“பார்ப்போம்...”
உதட்டை சுழித்து அழகு காட்டியபடி பேசிய பாரதி பேச்சை முழுதாக முடிக்க விவேக் விடவில்லை. அவளின் உதடுகளை தன் உதடுகளால் சிறை செய்திருந்தான்...
ஒரு சில நிமிடங்கள் கழித்து, சிறைப் பட்டிருந்த அவளின் உதடுகளை விடுதலை செய்த விவேக், கண்களை மூடி மயக்கத்தில் இருந்த பாரதியின் முகத்தை பார்த்து ரசித்துக் கொண்டே,
“நீ ரொம்ப அழகு ரதி...” என்றான் ரசனையோடு.
எதிர்பாராத அவனின் முத்தத்தில் தடுமாறி போயிருந்த பாரதி, மெல்ல சுதாரித்துக் கொண்டு, கணவனுக்கு செல்லமாக ஒரு அடி கொடுத்தாள்...
“போதும் போதும், உங்க ரொமான்ஸ்! நான் கீழே போறேன், நீங்களும் சீக்கிரம் வாங்க, அத்தை வந்தாச்சா தெரியலை...” என்றாள்.
“ரதி, உனக்கு ஞாபகம் இருக்கா, நம்ம கல்யாணத்துக்கு முன் நீ அழகா இருக்கேன்னு நான் சொன்னப்போ, நீ என்ன ஒரு முறை முறைச்சேன்னு???”
அந்த நாளின் நினைவில் பாரதியின் முகத்தில் புன்னகை தோன்றியது... ஆனாலும்,
“இல்லை, எனக்கு எதுவும் ஞாபகம் இல்லைங்க...” என்று பொய் சொல்லி விட்டு கட்டிலில் இருந்து எழுந்தவளை, விவேக்கின் கரம் தடுத்தது.
“உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கனும் ரதி...”