“என்ன?”
“அம்மா விஷயத்துக்கு நான் உனக்கு ஒரு சொல்யூஷன் சொன்னேனே... ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் நீ எதுக்கும் விவேக் தான் சொன்னார்ன்னு அம்மா கிட்ட சொன்னது போல தெரியலையே, ஏன்??”
“ப்ச்... அது போல் உங்க அம்மாவை ஏமாற்றப் பிடிக்கலை விவேக்...”
“ஹுஹும்?”
“அத்தை சொல்றதை எல்லாம் நானே மேனேஜ் செய்துப்பேன்...”
“ம்ம்ம்... இதை தான் நான் உன் கிட்ட எதிர்பார்த்தேன்... உன் கதையில் எல்லாம் இருந்த அந்த ஃபெமினிஸ்ட் அப்ரோச் எங்கேடா நிஜ பாரதி கிட்ட காணாம போச்சுன்னு பார்த்தேன்..." என்று விவேக் கேலி செய்யவும், பாரதி அவனைப் பார்த்து முறைத்தாள்...
"ஹேய்... முறைக்காதே... எனக்கு அப்புறம் மூட் வரும்...” என்றான் விவேக் சரசத்துடன்... அவனின் கைகளும் மனைவியை சுற்றி சென்று அணைத்துக் கொண்டது...
பாரதியும் அவனின் அணைப்பை மறுக்கவில்லை... அவனின் அணைப்பின் கதகதப்பை ரசித்துக் கொண்டே,
“என் கதை எல்லாம் படிச்சீங்களா விவேக்? நீங்க எதுவுமே அதைப் பற்றி சொல்லலையே?” என்றாள்.
“இதோ பாருடா!!! நான் சொல்லலையா??? எத்தனை தடவை அதைப் பற்றி பேச உன் ஹாஸ்டல் வந்தேன்... நீ தான் ஒவ்வொரு தடவையும் உன்னோட பாடிகார்ட் வச்சு துரத்தி விட்டீயே...”