விஷயத்தையும் சொல்லாம விட்ருவார். அதுக்கு அப்புறம் என் வாழ்க்கை போர்ட் ஹவுஸ் ஒய்ஃப் கதையா போயிடும். அதான் அவர் கிட்ட சொல்லலை. இது உங்க க்யூரியஸ் மைண்ட்க்கு நல்ல டைவர்ஷனா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.”
சத்யா அவளின் கேள்விக்கு முன்தினம் சொன்ன பதில் சரி தான் என சக்திக்கு இப்போது தோன்றியது..
தொடர்ந்து படுத்திருக்க விருப்பமில்லாமல் எழுந்து அமர்ந்தவள், ஒரு நோட் பேடை எடுத்து வைத்துக் கொண்டு சத்யா சொன்ன வழக்கு விபரங்களை நினைவுக்கு வரும் ஆர்டரில் பட்டியலிட்டாள்.
1.புதிதாக மதியூருக்கு வந்த அஹல்யாவிற்கு பல விதங்களில் உதவி செய்திருக்கிறான் சேகரன்.
2.சேகரனுடன் அஹல்யா நட்புடன் பழக அவர்கள் இருவரை பற்றிய தவறான கிசுகிசு ஊரில் பரவ தொடங்கி இருக்கிறது.
3.அதை தொடங்கி வைத்தவனே சேகரன் தான் என்பது அஹல்யாவிற்கு தெரிய வரவும், சேகரனை திட்டி இருக்கிறாள்.
4.ஆனாலும் சேகரன் அவனுக்கும் அஹல்யாவிற்கும் நடுவே தவறான உறவு இருப்பதாக பலரிடமும் சொல்லிக் கொண்டு சுற்றி இருக்கிறான்.
5.இந்த நிலையில் திடீரென மலைப்பாதை வளைவில் இறந்த சடலமாக சேகரனை கண்டுப்பிடித்தார்கள்.
6.போலீஸ் விசாரணையை தொடங்கியது முதலே பலரும் சொன்ன ஒன்று - சேகரன் இறந்தது விபத்தாக இருக்க முடியாது, கொலை, அதுவும் அஹல்யா தான் அவனை கொலை செய்து விட்டாள்.
7.போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் சேகரன் உடம்பில் விபத்து சமயத்தில் ஏற்பட்ட காயங்கள்