(Reading time: 9 - 18 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

காட்டினாள் பாரதி. ஏற்றுக் கொள்வது போல் கைகளை நீட்டிய விவேக்கின் கைகளில் ஒரு தட்டை கொடுத்த பாரதி, அவனுக்கு சற்று தள்ளி ஒரு நாற்காலியில் அமர்ந்து தன் தட்டில் இருந்து எடுத்து சாப்பிட தொடங்கினாள்.

   

விவேக் அவளுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயரைப் போல் அவனுக்கு என்ன பெயர் வைப்பது என யோசித்தபடி சாப்பிட்டவள், எதிர்பாராத விவேக்கின் அணைப்பில் சிந்தனை கலைந்தாள். ஏதோ சொல்ல வாய் திறந்தவள், விவேக் இன்னமும் கையில் ஃபோன் வைத்திருப்பதை கவனித்து விட்டு தயங்கினாள்.

  

ம்யூட் (mute), கவலைப் படாதே...” என்று பாரதி கேட்காத கேள்விக்கும் பதில் சொன்னான் அவள் கணவன்.

  

அத்தையும் ம்யூட்டில் தான் மீட்டிங் அட்டென்ட் செய்றாங்க, நீங்களும் அதே தானா? இதற்கு எதற்கு ஒரு மீட்டிங்?” என்றாள் பாரதி கேலியாக!

  

சரியா சொன்ன...” என்ற விவேக், தன் ஃபோனை அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு பாரதியை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

  

என்னங்க இது? விடுங்க... அத்தை கீழே இருக்காங்க...” என சிணுங்கினாள் பாரதி.

  

இருக்கட்டும்... எனக்கென்ன? ஐ லவ் யூ, மை டியர் ரதி டார்லிங்...” ஒவ்வொரு வார்த்தைக்கும் விவேக்கின் அணைப்பு இறுகிக் கொண்டே போனது. அவனின் அணைப்பிலும், பேச்சிலும் மயங்கிப் போனாள் பாரதி. மேலும் வாகாக விவேக்கின் மார்பில் சாய்ந்து, அவனை இரு கரம் கொண்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்!

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.