“அட! அது என்ன ரதி?”
“பாரதியை அவர் பா - ரதி ஆக்கி, செல்லமா ரதி ஆக்கிட்டார்.”
“ஓ!” என்ற கற்பகத்தின் முகத்தில் வந்திருந்த மாற்றத்தை கவனித்து மேலே பேசாமல் வாயை மூடிக் கொண்டாள் உமா!
🌼🌸❀✿🌷
மதுவும் பாரதியும் மதுவின் அடுத்த கருத்தரங்கிற்கான (symposium) ஐடியாக்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். பாரதி மதுவிற்கு உதவ பல டாப்பிக்குகளை பட்டியலிட்டுக் கொடுத்தாள். அதில் இருந்து மதுவிற்கு பிடித்த ஒரு தலைப்பை தேர்வு செய்துக் கொள்ள சொன்னாள். மதுவும் அந்த லிஸ்ட்டை பார்த்து யோசிக்க தொடங்கினாள். அப்போது உமா அங்கே வரவும்,
“நித்யா தூங்கியாச்சா உமா?” என அவளிடம் கேட்டாள் பாரதி.
“இல்லை பாரதி, அவளோட அப்பா கிட்ட விளையாடிட்டு இருக்கா. ஈவ்னிங் ஆறு மணிக்கு மேலே தான் தூங்கி எழுந்தா. அதனால இன்னைக்கு அவ்வளவு சீக்கிரம் தூங்க மாட்டா...” என்றாள் உமா.
“சின்ன குழந்தை தானே?” என்று பாரதி சொல்லவும், மது எழுந்துக் கொண்டாள்.
"நான் என் ரூமுக்கு போய் யோசிக்கிறேன் அண்ணி. எந்த டாப்பிக்குன்னு செலக்ட் செய்துட்டு சொல்றேன்..."
"சரி மது... எதுவா இருந்தாலும் உனக்கு பிடிச்சதா செலக்ட் செய்..." என்றாள் பாரதி...
தலை அட்டி விட்டு துள்ளல் நடையுடன் சென்றாள் மது.