(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அவ்வளவாக பேசாத மாமனாரே வாய் திறந்து புகழவும், பாரதியின் முகம் மலர்ந்தது. விவேக்கை பற்றி கேட்கவே வேண்டாம்! அவனுக்கு நோபல் பரிசு கிடைத்து விட்டதுப் போல அவனின் முகம் மலர்ந்திருந்தது!

  

ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை புகழ்வதா? உலக அதிசயம் தான்!” என்று கிண்டல் செய்தான் நிரஞ்சன்.

  

இரண்டு அண்ணி போல ஃப்ரென்ட்லியா இருந்தால், எல்லா அதிசயமும் நடக்கும்...” என்றாள் மது.

  

அங்கே நடந்துக் கொண்டிருந்த பேச்சைக் கேட்டு கற்பகத்திற்கு மட்டும் முகமும், மனமும் கடுப்பாகியது!!!

   

கற்பகத்தின் அமைதியையும், முக மாற்றத்தையும் மற்றவர்கள் கவனித்தார்களோ இல்லையோ இரண்டு மருமகள்களும் கவனித்தார்கள்!!! தங்களுக்குள் அமைதியாக ஒரு பார்வையை பரிமாறிக் கொண்டு, அவர்களின் வழக்கம் போல் அதைக் கண்டுக் கொள்ளாது பேச்சை வேறு பக்கம் மாற்றினார்கள்! 

  

🌼🌸❀✿🌷

   

புதன்கிழமை அன்று கல்லூரியில் இருந்து கணவனை செல்ஃபோன் வழியாக அழைத்தாள் பாரதி.

  

ஹாய் ரதி! என்ன அதிசயம்!” என்ற விவேக்கின் குரலில் மகிழ்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது!

  

அதை மனதார ரசித்துக் கொண்டே,

   

நான் உங்களுக்கு ஃபோன் செய்ததே இல்லையா என்ன? இப்படி ஹைப் செய்றீங்க?” என்றாள் பாரதி!

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.