(Reading time: 6 - 11 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“ஆமாம் டாக்டர், அவங்க பேர் அஹல்யா!” என்றாள் சத்யா.

  

“எனக்கு பேரு தெரியாது, ஆனா அந்த பொண்ணை ஞாபகம் இருக்கு.”

  

“அவங்களை உங்களுக்கு எப்படி தெரியும் டாக்டர்?”

  

“எதுக்கு இதை எல்லாம் கேட்குறன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

  

“எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் அஹல்யாவை கல்யாணம் செய்துக்க ஆசைப் படுறார். சவீதா உங்களுக்கு அவங்களை தெரியும்னு சொன்னாங்க. அதான் பொதுவா விசாரிக்கலாம்னு வந்தேன்.”

  

“அந்த அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது சத்யா. வேலை கிடைக்கலைனா இந்த ஊரை விட்டு போக வேண்டி இருக்கும்னு சொன்னா, அதனால லெட்டர் கொடுத்தேன். சவீதா அந்த பொண்ணு குணம் சரியில்லைன்னு வந்து கம்ப்ளெயின்ட் செய்தா. நான் கூட அப்படி இருந்தா இருந்துட்டு போகட்டும்ன்னு சொல்லி அனுப்பினேன். இப்போ எல்லாம் ஊருல எது தான் நடக்காம இருக்கு.”

  

“உண்மை தான் டாக்டர்.”

  

“யாருக்கோ அஹல்யாவை பிடிச்சிருக்குன்னு சொல்றீயே, அவரை கல்யாணம் செய்துக்க சொல்லு. எனக்கு ஞாபகம் இருக்குறதை வச்சு சொல்றேன். அந்த பொண்ணு நல்ல பொண்ணா தான் தெரிஞ்சா.”

  

“தேங்க்ஸ் டாக்டர். இதுக்கெல்லாமா என் கிட்ட வருவீங்கன்னு கோபப் படுவீங்களோன்னு யோசிச்சேன்.”

  

“தனியா டைம் கேட்டு வாங்கிட்டு வந்திருந்தா கோபப் பட்டாலும் பட்டிருப்பேன்.”

  

“செவன்த் ஃப்ளோர் வந்திருச்சு டாக்டர் பிரசாத்.” அதுவரை அமைதியாக இருந்த மற்றொரு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.