(Reading time: 6 - 11 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“அப்போ அடுத்து என்ன செய்றது சக்தி?”

  

“அஹல்யா கேட்டுக்கிட்டதால டாக்டர் ரெக்கமென்ட் செய்தார். சரி! ஆனால், டாக்டர் கிட்ட போய் பேசினால் வேலை கிடைக்கும்னு அஹல்யாக்கு எப்படி தெரியும்?”

  

“அதானே, அவளுக்கு எப்படி தெரியும்???”

  

“அஹல்யா ஊருக்கு புதுசா வந்தவ. யாராவது அவக் கிட்ட சொல்லி இருந்தா தான அவளுக்கு தெரியும்.”

  

“கரக்ட் சக்தி, யார் அந்த எக்ஸ்!!!”

  

“நாம அஹல்யா கிட்ட நேரா பேச வேண்டிய நேரம் வந்தாச்சு சத்யா!”

  

சத்யா மறுக்கவில்லை, மாறாக, ஆமோதிப்பதாக தலையை ஆட்டினாள்!

   

🌼🌸❀✿🌷

   

ஹான்ட்பேகை ஸ்கூட்டியில் மாட்டி விட்டு ஸ்டார்ட் பட்டனை அழுத்தினாள் அஹல்யா. அபினவ் இன்றும் வரவில்லை. ஊருக்கு போனவன் திரும்பி வந்து விட்டானா, வர வில்லையா? வேண்டுமென்றே அவளை தவிர்க்கிறானா? எவ்வளவு முயற்சி செய்தாலும் கேள்விகள் குடைவதை அஹல்யாவால் தடுக்க முடியவில்லை.

  

“அஹல்யா, அஹல்யா!” வேகமாக வந்து நின்ற பைக்கில் இருந்து இறங்கினான் அபினவ். காக்கிச் சட்டையில் தான் இருந்தான்.

  

“அபினவ்!” மறைக்காமல் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள் அஹல்யா.

  

“ஒரு ஃபைவ் மினிட்ஸ் இங்கேயே இரு... இருங்க அஹல்யா. இதோ வந்திடுறேன்!”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.